ADDED : ஜூன் 14, 2024 01:03 PM

* திருச்சியில் அருள்புரியும் சிவனின் திருநாமம் தாயுமானசுவாமி. இவருக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்றும் பெயருண்டு.
* பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக இருப்பது காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்தியப்பர், அம்மன் ஞானப்பூங்கோதை. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகார பூஜை செய்வர்.
* பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை திருமந்திரம். இதை இயற்றியவர் திருமூலர்.
* மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர் திருமங்கையாழ்வார்.
* முருகப்பெருமானின் வரலாறான கந்தபுராணத்தை தமிழில் எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.
* பெருமாள் மீது ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம். இதை தொகுத்தவர் நாதமுனிகள்.
* கண்ணன் மீது தீராத காதல் கொண்ட ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
* சிவபக்தரான ராஜராஜச் சோழன் தஞ்சாவூரில் பெருவுடையார் கோயிலைக் கட்டினார். இவருக்கு சிவபாதசேகரன் என்னும் சிறப்பு பெயருண்டு.