ADDED : அக் 10, 2021 04:54 PM

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பண பலன் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம் நாள் - நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்டநாள் ஆசை நிறைவேறுதல்
11ம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்க நகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
மகாளய பட்சம் என்னும் அரிய வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தினால் நம் தலைமுறைக்கே புண்ணியத்துடன் பலன் கிடைக்கும்.
