ADDED : நவ 27, 2019 11:59 AM

ஓம் ஆவுடையான் தந்த அருளே போற்றி
ஓம் இழிந்த யாகத்தை இடறினாய் போற்றி
ஓம் ஈசன் மகனே இறைவா போற்றி
ஓம் உருத்திரன் சேவகன் ஆனாய் போற்றி
ஓம் உள்ளம் அமரும் உத்தமா போற்றி
ஓம் ஊக்கமும் அருளும் தருவாய் போற்றி
ஓம் எட்டுக் கைகள் உடையாய் போற்றி
ஓம் ஏறு ஊர்தியான் செல்வனே போற்றி
ஓம் ஐயன் ஆணை முடித்தாய் போற்றி
ஓம் ஒப்புமை இல்லா அழகனே போற்றி
ஓம் சிவனார் சிகையில் வந்தாய் போற்றி
ஓம் சீலம் அளித்துக் காப்பாய் போற்றி
ஓம் தும்பை சூட அதிர வருவாய் போற்றி
ஓம் பகைவரை பறக்க செய்வாய் போற்றி
ஓம் வெஞ்சமர் புரிந்த வீரவா போற்றி
ஓம் அரக்கர் படை ஓடச் செய்தாய் போற்றி
ஓம் கவின்மிகு வெற்றி பெற்றாய் போற்றி
ஓம் பைரவர் துணை கொண்டாய் போற்றி
ஓம் பாங்காய் வெற்றியடைந்தாய் போற்றி
ஓம் திசையெலாம் வெற்றி பெற்றாய் போற்றி
ஓம் பகனின் கண்ணைப் பறித்தாய் போற்றி
ஓம் பகலவன் பற்கள் பறித்தாய் போற்றி
ஓம் கதிர் ஒளி இழக்கச் செய்தாய் போற்றி
ஓம் சந்திரனைக் காலால் தேய்த்தாய் போற்றி
ஓம் அக்னி நாவை அறுத்தாய் போற்றி
ஓம் அவனது தடக்கை தறித்தாய் போற்றி
ஓம் அமரர் வாழ்வை முடித்தாய் போற்றி
ஓம் வசிட்டர் காமதேனு பறித்தாய் போற்றி
ஓம் குறுமுனி குகையில் அடைத்தாய் போற்றி
ஓம் அமரர் ஆணவம் அழித்தாய் போற்றி
ஓம் எமனின் வாகனம் பற்றினாய் போற்றி
ஓம் ஏகன் பணியை முடித்தாய் போற்றி
ஓம் எமனின் கொடியைப் பற்றியவா போற்றி
ஓம் வருணன் தடக்கை பிணைத்தாய் போற்றி
ஓம் மலைகளைத் தகர்த்த மன்னவா போற்றி
ஓம் விருட்சப் படையை அடக்கியவா போற்றி
ஓம் முனிவர் வெருவ முடித்தாய் போற்றி
ஓம் முன்வினை பாவம் தீர்த்தாய் போற்றி
ஓம் வேதியரை ஒளியச் செய்தாய் போற்றி
ஓம் தக்கன் தலையை அறுத்தாய் போற்றி
ஓம் தகரின் தலையை அளித்தாய் போற்றி
ஓம் தமருகன் தந்த தனயனே போற்றி
ஓம் தக்கன் செருக்கை அழித்தாய் போற்றி
ஓம் தாட்சாயணி சாபம் முடித்தாய் போற்றி
ஓம் காளியை துணை கொண்டாய் போற்றி
ஓம் காக்கும் காவல் தெய்வமே போற்றி
ஓம் வேள்வி அழித்த வெவ்வுருவே போற்றி
ஓம் தோல்வி அறியாத் துாயவரே போற்றி
ஓம் அட்டமா ஆயுதம் ஏந்தினாய் போற்றி
ஓம் இட்ட பணியை முடித்தாய் போற்றி
ஓம் தண்டமிழ் போற்றும் தலைவா போற்றி
ஓம் தனித்து கோயில் கொண்டாய் போற்றி
ஓம் தரணி எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் தமிழர் வாழ்வைக் காப்பாய் போற்றி
ஓம் ஆந்திராவில் அழகுற அமர்ந்தாய் போற்றி
ஓம் கர்நாடகத்தில் கவினுற இருந்தாய் போற்றி
ஓம் கேரளத்தில் கோயில் கொண்டாய் போற்றி
ஓம் பர்வத மலையுறை பாலகா போற்றி!
ஓம் காஷ்மீரத்தில் உறைந்தாய் போற்றி
ஓம் பேசும் தெய்வம் ஆனாய் போற்றி
ஓம் தேவாரப் பண்ணில் ஒளிர்ந்தாய் போற்றி
ஓம் திருவாசக உந்தியில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வேதத்தில் சிறப்பிடம் பெற்றாய் போற்றி
ஓம் நாட்டுப்புற பாடலில் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் சிவனின் திருஉரு பெற்றாய் போற்றி
ஓம் தீமைகளை அழித்தொழிப்பாய் போற்றி
ஓம் சூலம் ஏந்திட வந்தாய் போற்றி
ஓம் பகைவரை ஓடச் செய்தாய் போற்றி
ஓம் அதட்டொலி செய்த அற்புதா போற்றி
ஓம் ஆசறு ஆதி வானவனே போற்றி
ஓம் வாழ்வு தரும் வீரபத்ரா போற்றி
ஓம் சினத்தீயின் வெம்மையே போற்றி
ஓம் சிந்தனையில் நிறைந்த சிவனே போற்றி
ஓம் சிவனின் தோற்றம் கொண்டாய் போற்றி
ஓம் சீராய் வினைகள் முடித்தாய் போற்றி
ஓம் அல்லோரை அழித்து ஒழிப்பாய் போற்றி
ஓம் நல்லோரை வாழ வைப்பாய் போற்றி
ஓம் கவலை தீர்த்து அருள்வாய் போற்றி
ஓம் கருவைக் காத்து நிற்பாய் போற்றி
ஓம் காலம் தோறும் சிறப்பாய் போற்றி
ஓம் கணபதியின் இனிய சோதரா போற்றி
ஓம் முருகனுக்கு மூத்த முதல்வனே போற்றி
ஓம் அருள்மிகு வீரபத்ர தெய்வமே போற்றி
ஓம் அருட்பெருங் கடவுள் ஆனாய் போற்றி
ஓம் வினைகள் அறுக்கும் வீரனே போற்றி
ஓம் வீரத்தை வழங்கும் வித்தகா போற்றி
ஓம் நித்தம் அருளைப் பொழிவாய் போற்றி
ஓம் உன்னத வாழ்வு அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வம் ஆனாய் போற்றி
ஓம் சைவம் தழைக்கச் செய்தாய் போற்றி
ஓம் செம்பொற் கழலடி செல்வா போற்றி
ஓம் வம்சம் செழிக்கச் செய்வாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு அளிப்பாய் போற்றி
ஓம் நாமகள் நாசியை அரிந்தாய் போற்றி
ஓம் நானிலம் சிறக்கச் செய்வாய் போற்றி
ஓம் திண்மை நிறைந்த தோளாய் போற்றி
ஓம் தீமை மனத்தைத் தீய்ப்பாய் போற்றி
ஓம் உலகம் உய்யச் செய்வாய் போற்றி
ஓம் உத்தமத் தெய்வமே பத்திரா போற்றி
ஓம் ஆசறு ஆதி வானவனே போற்றி
ஓம் ஆற்றல் மிக்க அடலரசே போற்றி
ஓம் தேவரை விரட்டிய தேவரே போற்றி
ஓம் தேயமெலாம் போற்றும் வீரரே போற்றி
ஓம் மாண்டவர்க்கு உயிர் கொடுத்தாய் போற்றி
ஓம் மீண்டும் போரிட்ட புத்திரா போற்றி
ஓம் மங்கையர் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் மாண்புறு தெய்வமாய் ஆனாய் போற்றி
ஓம் போற்றி போற்றி வீரபத்திரரே போற்றி