பலன் தரும் பரிகாரம் - அடிக்கடி உடம்புக்கு முடியலையா?
பலன் தரும் பரிகாரம் - அடிக்கடி உடம்புக்கு முடியலையா?
ADDED : ஜூலை 22, 2019 11:09 AM

சிலருக்கு உடம்பு பாடாய்ப் படுத்தும். உடல்நலம் இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிதர்சனமான உண்மை. சூரியனுக்குரிய ஸ்லோகத்தை ஞாயிறன்று சூரிய ஹோரையில் (காலை 6:00 - 7:00 மணி) 12 முறை ஜபித்து சூரியனை வழிபட உடல் நலம் நன்றாக இருக்கும்.
''ஜபாகு ஸும சங்காஸம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரண தோஸ்மி திவாகரம்''
பொருள்: செம்பருத்திப் பூவினைப் போல சிவந்தவனே! காஸ்யப முனிவரின் புதல்வரே! பிரகாசம் மிக்கவரே! இருட்டின் பகைவரே! பாவம் போக்குபவரே! சூரிய தேவனே! உம்மைப் போற்றுகிறேன்.
சிவன் கோயில் பிரகாரத்தில் இவருக்கு தனி சன்னதி உண்டு. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் இவர் இருப்பார். ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நாட்களில் சூரியனுக்கு செந்தாமரை மலர் மாலை சாத்தி வழிபடலாம்.