sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ஆபத்தை போக்கும் ஆலங்குடி பதிகம்

/

ஆபத்தை போக்கும் ஆலங்குடி பதிகம்

ஆபத்தை போக்கும் ஆலங்குடி பதிகம்

ஆபத்தை போக்கும் ஆலங்குடி பதிகம்


ADDED : ஏப் 17, 2020 12:26 PM

Google News

ADDED : ஏப் 17, 2020 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் பதிகத்தை தினமும் பாடுங்கள்.

சீரார் கழலே தொழுவீர் இதுசெப்பீர்வாரார் முலைமங்கை யொடும் முடனாகிஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்காரார் கடல்நஞ்சு அமுதுண்ட கருத்தே.

தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகிஎழிலார் இரும்பூளை யிடங்கொண்ட ஈசன்கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே. அன்பா லடிகை தொழுவீர் அறியீரேமின்போல் மருங்குல் மடவா ளொடுமேவிஇன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடிஇச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்உச்சித் தலையிற் பலிகொண் டுழலுாணே.

சுற்றார்ந் தடியே தொழுவீர் இதுசொல்லீர்நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகிஎற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்புற்றாடு அரவோடென்பு பூண்ட பொருளே.

தோடார் மலர்துாய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்சேடார் குழற்சே யிழையோடு உடனாகிஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்காடார் கடுவே டுவனான கருத்தே.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று.

ஒருக்கும் மனத்தன்பர் உள்ளீர் இதுசொல்லீர்பருக்கை மதவேழ முரித்து உமையோடும்இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்அரக்கன் உரந்தீர்த்தருள் ஆக்கிய வாறே.

துயரா யினநீங்கித் தொழும் தொண்டர் சொல்லீர்கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகிஇயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்முயல்வார் இருவர்க்கு எரியாகிய மொய்ம்பே.

துணைநன் மலர்துாய்த் தொழும் தொண்டர்கள் சொல்லீர்பணைமென் முலைப்பார்ப் பதியோடு உடனாகிஇணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்அணைவில் சமண் சாக்கியமாக் கியவாறே.

எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்செந்தண் தமிழ்செப்பிய பத்திவை வல்லார்பந்தம் மறுத்தோங்குவர் பான்மையினாலே.






      Dinamalar
      Follow us