sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்...

/

நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்...

நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்...

நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்...


ADDED : ஜூன் 11, 2010 12:42 PM

Google News

ADDED : ஜூன் 11, 2010 12:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவனப்படுத்துகிறார் காந்திஜி

* பகையுணர்வால் அழிவுதான் உண்டாகுமே ஒழிய ஆக்கத்திற்கு வழியில்லை. அன்போ அனைத்தையும் ஆக்குமே ஒழிய எதையும் அழிப்பதில்லை.

* செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியானதாக இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்கவேண்டும்.

* கடவுளை நேரில் அறிய வேண்டுமானால், உள்ளத்தில் உண்மையுள்ளவர்களாக, நீதியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

* கடவுள் என்ன நோக்கத் திற்காக உலகைப் படைத்தார், உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியங்களை அவர் மட்டுமே முழுமையாக அறிவார்.

* இறைவனோடு இரண்டறக் கலக்க வேண்டுமானால், வைராக்கியத்தை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.

* உழைப்பின்றி உண்பவர்களைத் திருடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். உழைப்பினால் வந்த செல்வமே என்றென்றும் நிலைத்திருக்கும்.

* பெண்ணைப் பலமற்றவள் என்று சொல்வது அவர்களை நிந்திப்பதற்குச் சமம். பெண்ணுக்கு ஆணை விட ஆன்மபலம் அதிகம்.

* ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் கடவுளுக்கு மகிழ்ச்சி தருவது வேறில்லை. சேவையே தூய்மையான வழிபாடாகும்.

* ஒழுங்கு, கட்டுப்பாடு, பணிவு இவை அனைத்தும் மனிதனை சுதந்திரமாக வைக்கும் தன்மை கொண்டவை. சத்தியம் என்னும் திருக்கோயிலை அடைவதற்கு இக்குணங்கள் உதவியாக இருக்கும்.






      Dinamalar
      Follow us