sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

விநாயகர் பற்றிய தகவல்கள்

/

விநாயகர் பற்றிய தகவல்கள்

விநாயகர் பற்றிய தகவல்கள்

விநாயகர் பற்றிய தகவல்கள்


ADDED : ஆக 30, 2019 02:56 PM

Google News

ADDED : ஆக 30, 2019 02:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விநாயகருக்கு புதன்கிழமையில் அருகம்புல் சாத்தி வழிபடுவது சிறப்பு. தொடர்ந்து 9 புதன்கிழமைகளில் வழிபட்டு ஏழைக்குழந்தைகளுக்கு பேனா, பென்சில் உட்பட கல்வி உபகரணங்கள் தானம் அளித்தால், ஞாபகசக்தி அதிகரித்து படிப்பில் முன்னேறுவர்.

* மும்பை சித்தி விநாயகர் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வேலை தேடுபவர்கள் நல்ல பணி கிடைக்க வேண்டுவர். வேலை கிடைத்த உடன் முதல் மாத சம்பளத்தில் புதிய வஸ்திரம் சாத்தி வழிபடுவர்.

* மும்பை டிட்வாலா மகாகணபதியின் கண்கள், வயிற்றில் வைரக்கற்கள் ஜொலிக்கும். இவரை வழிபட மனம், உடல் நலம் பெறுவதோடு ராகு, கேது தோஷமும் நீங்கும்.

* புனே மார்க்கெட் பகுதியில் 'தகடுசேட் கணபதி' கோயில் உள்ளது. இங்கு விநாயகருக்கு படைக்கும் பொரி, தீர்த்தத்தை பக்தர்களே எடுத்துக் கொள்ளலாம். இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களை சேர்ந்தோர் பத்தில் ஒரு பங்கு லாபத்தை காணிக்கையாக இவருக்கு செலுத்துவர்.

* பெங்களூரு மல்லேஸ்வரம் 8 வது கிராஸில் உள்ள விநாயகருக்கு சோமாஸி என்னும் கர்ஜிக்காய் மாலை சாத்தி வழிபட திருமணத்தடை நீங்கும். வளர்பிறை சதுர்த்தியன்று இவரை தரிசிப்போருக்கு குறையில்லா வாழ்வு கிடைக்கும்.

* முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை அடிவாரத்தில் கண் கொடுத்த விநாயகர் இருக்கிறார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்யும் முன் இங்கு வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தியன்று தரிசித்தால் கண் நோய் வராது. வயதான காலத்திலும் பார்வைக் குறைபாடு ஏற்படாது.

* நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதி விநாயகர். கேது திசை, கேது புத்தியால் சிரமப்படுபவர்கள் செவ்வாயன்று இவரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமையில் வன்னி இலைகளால் அர்ச்சித்தால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி பாதிப்பு குறையும். ஞாயிறன்று எருக்கம்பூ மாலை அணிவிக்க சூரிய தோஷம் விலகும்.

* தொந்தி கணபதியை சமஸ்கிருதத்தில் 'டுண்டி கணபதி' என்பர். காசியில் இருக்கும் 'டுண்டி ராஜகணபதி' பிரசித்தமானவர். இதே பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இலங்கை செல்ல சேதுக்கரையில் பாலம் கட்டும் முன் ராமபிரான் இவரை வழிபட்டார்.

* மகாராஷ்டிரா மக்கள் விநாயகரை முமுழுதல் கடவுளாக வழிபடுகின்றனர். அஷ்ட விநாயகர் கோயில் என்னும் பெயரில் 8 விநாயகர் கோயில்கள் உள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்டியவர் பாலகங்காதர திலகர்.

* ஒரே சன்னதியில் இரண்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து இரட்டை விநாயகராக வழிபடுவர். இவர்களை விக்னராஜர், விநாயகர் என சொல்வர். 'தடையும் நானே; அதைப் போக்கும் விடையும் நானே' என்பது தான் இரட்டை பிள்ளையாரின் தத்துவம் என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

* திருநெல்வேலி வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் உச்சிஷ்ட கணபதி கோயில் உள்ளது. இவருக்கு முதுகை காட்டி தோப்புக்கரணம் இடுவர். முகம், முதுகு என்ற பாகுபாடு கடவுளுக்கு கிடையாததால், எல்லாம் சமம் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்கின்றனர்.

* நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சிவன் கோயிலில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்தார். இங்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞன் ஒருவன் இறந்ததை அறிந்து, பதிகம் பாடி பிழைக்கச் செய்தார். இக்கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரில் விஷபயம் போக்கும் 'விடம் தீர்த்த விநாயகர்' கோயில் உள்ளது.

* அவ்வையார் பாடிய விநாயகர் அகவலின் முதல் வரியே 'சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதம்'. 'களபம்' என்பதற்கு 'குட்டி யானை' என பொருள். குட்டி யானையான விநாயகரை வழிபட்டால், எதையும் எளிதாக சாதிக்கும் வல்லமை உண்டாகும். இதற்கு வேறொரு விளக்கமும் சொல்வர். 'சீதக் களபம்' என்பதற்கு 'குளிர்ந்த சந்தனக் கலவை' என பொருள். குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த சந்தன கலவையை சிவந்த தாமரை போன்ற பாதங்களில் பூசியவர் என்றும் சொல்வர்.

* காமம், கவலை, கோபத்தால் நம் மனம் அலை பாய்கிறது. 'அது எப்படியாகுமோ? இது எப்படியாகுமோ?” என்ற வருத்தமும் அடிக்கடி தலை துாக்குகிறது. குழந்தைப் பருவம் முடிந்து வளர வளர இந்த குணம் அதிகரிக்கிறது. குழந்தைகள் வணங்கும் 'குழந்தை சுவாமியாக' விநாயகர் இருக்கிறார். கனமான யானை வடிவில் இருந்தாலும், மூஞ்சூறு சுமக்கும் விதத்தில் பரம லேசான மூர்த்தியாகவும் இருக்கிறார். அவரது யானை முகத்தை பார்த்தாலே பரவசம் உண்டாகும்.

* சிவபார்வதியை ஒரே ஒரு முறை சுற்றி, மாம்பழம் வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வருவோருக்கு தேகபலம், புத்திபலத்தை வழங்குபவராக இருக்கிறார். நெற்றியில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணமிடுதல் என இவருக்குரிய வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும் விசேஷ பிரார்த்தனை 'பிரதட்சிணம்' என்னும் சுற்றி வருவதாகும். சாதாரணமாக இவரை மூன்று முறை வலம் வந்தாலும், நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று 21, 48, 108 முறை சுற்றுவது சிறப்பு.

* விநாயகரை பூஜித்த பின்னரே ஹோமம் செய்ய வேண்டும். செய்யும் செயலில் விக்னம்(தடை) ஏற்படாமல் இருக்க விநாயகரை வணங்குகிறோம். மனிதர்களுக்குத் தான் தடை ஏற்படும் என்பதில்லை. தெய்வங்களுக்கும் தடை ஏற்படலாம். அதற்காகவும் விநாயகர் பூஜை செய்வது அவசியம். இதனால் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் விநாயகர் ஸ்லோகம் சொன்ன பிறகே வழிபாட்டை தொடங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us