sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

உண்மையின் கதவுகள் திறக்கட்டும்! வேண்டுகோள் விடுக்கிறார் தாகூர்

/

உண்மையின் கதவுகள் திறக்கட்டும்! வேண்டுகோள் விடுக்கிறார் தாகூர்

உண்மையின் கதவுகள் திறக்கட்டும்! வேண்டுகோள் விடுக்கிறார் தாகூர்

உண்மையின் கதவுகள் திறக்கட்டும்! வேண்டுகோள் விடுக்கிறார் தாகூர்


ADDED : நவ 26, 2010 03:35 PM

Google News

ADDED : நவ 26, 2010 03:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சில இடங்களில் கடல் அமைதியாய் ஆர்ப்பரிக்காமல் இருக்கிறது. அதற்காக அலை இல்லாமலா போய்விட்டது? அதுபோல உழைத்துக் கொண்டும், இயங்கிக் கொண்டும்  இருங்கள்.

* காலைப் பொழுதில் தளிர்களும், இலைகளும்  சூரியனின் ஒளியில் தலையசைப்பதுபோல, புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்குங்கள்.

* அழகுணர்வும், ஒழுக்கத்தின் மேன்மையும் நிறைந்த வாழ்வில் துயரம் என்பதற்கு சிறிதும் இடமில்லை. அமைதியும், மகிழ்ச்சியும் அப்போது ஆனந்தம் நர்த்தனமாடத் துவங்கிவிடும்.

* உண்மையை அடைய அன்பு ஒன்றே சிறந்த வழி. ஆனால், அவ்வழி அதிக விலை <உடையதாய் இருக்கிறது. தவறுகளை நாம் எப்போதும் மறைத்துவிட முயலக்கூடாது. அதனால், உண்மையின் கதவுகள் அடைபட்டுப் போய்விடும்.

* நாம் உண்மையாய் உழைக்கத் தொடங்கினால் இறைவன் வாழ்வளிப்பான். நாம் உள்ளம் கசிந்து பாடித் துதித்தால் இறைவன் நம்மை விரும்பத் தொடங்குவான்.

* அன்பு நம் அறிவை செம்மைப்படுத்தி விடுதலை அளிக்கும் ஆற்றல் கொண்டது. நாம் அனைவரும் அன்பினால் மட்டும் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

* உண்மைக்கு அப்பாற்பட்டு எவன் ஒருவனுடைய புகழ் பளிச்சிடுகிறதோ, அவனே பெருமைக்குரிய மனிதனாவான்.

* அடக்கத்தோடு இருக்கும் மனிதர்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை பலரும் புரிந்து கொள்வதில்லை.

* இந்த உலகம் அழகுமயமாகவும், மகிழ்ச்சி மிக்கதாகவும் விளங்குவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செயல்படுத்துதல் அவசியமானதாகும்.

* நேர்மை உள்ள மனிதன் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை பெற்றிருப்பான். ஆனால், நேர்மையில்லாமல் வாழ்வில் தவறு செய்வது மட்டுமே வாழ்க்கை என்று இருப்பவர்கள்தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.






      Dinamalar
      Follow us