தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூலை 01, 2016 10:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2016 10:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** அவரவர் நல்வினை, தீவினைக்கு ஏற்றபடிதான் சொர்க்கம், நரகம் கிட்டுமா?

முத்து மாணிக்கம், விழுப்புரம்.

இதிலென்ன சந்தேகம். புண்ணிய பலம் கூடுதலாக இருந்தால் சொர்க்கம். பாவ சுமை கூடுதலாக இருந்தால் நரகம் தான். சொர்க்கம், நரகம் இரண்டில் இருந்தும் விடுபட்டு பிறவியற்ற நிலை பெற ஆசைகளை ஒழிக்க வேண்டும். தெய்வ வழிபாடும் புண்ணியங்களும் மட்டும் செய்து அதன் பலனையும் தெய்வத்திற்கே அர்ப்பணித்து வினைகளை நீக்க வேண்டும்.



சாளக்கிராமத்தை பூஜையறையில் வைத்து வழிபட விரும்புகிறேன்... செய்யலாமா?

ஆர்.நடராஜன், செஞ்சி.

சாளக்கிராமம் என்பது கண்டகி, கோமுகி, கங்கை, யமுனை போன்ற புனித நதிகளில் கிடைப்பது. இரண்டு விதமாக இதைப்பற்றி அறிந்து கொள்ளலாம். பாணாசுரன் என்பவன் கோடி லிங்கங்களை பூஜித்தான். அவைகளே இந்நதிகளில் கிடைக்கின்றன என்பது ஒருநிலை. மலைக் கற்கள் நதியின் நீரோட்டத்தில் உருண்டு திரண்டு சாளக்கிராமமாக கிடைப்பது என்பது மற்றொரு நிலை. எப்படியாயினும் புனித நதிகளில் பூஜைக்கு உகந்தவையாக கிடைக்கும் இவற்றை சிவபூஜை, நாராயண பூஜை மற்றும் பஞ்சாயதன பூஜை என்ற நிலைகளில், ஒரு குருவிடம் உபதேசம் பெற்ற பிறகு வீட்டில் பூஜை செய்வது நல்லது.

* சுவாமி படங்களை பிளாஸ்டிக் மாலைகளால் அலங்கரித்து வழிபடலாமா?

எஸ்.சம்பூர்ண லட்சுமி, மதுரை.

கூடாது. நறுமணம் மிக்க மலர் மாலைகளே சூட வேண்டும்.

விரதமிருக்கும் நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

த.பாலசுப்ரமணியன், கோவை.

விரதமிருக்கும் நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், சவரம் செய்தல், நகம் வெட்டுதல் போன்றவை செய்யக்கூடாது.



* விநாயகருக்கு தோப்புக்கரணம் இடுவது ஏன்?

எம்.கிருபானந்தன், புதுச்சேரி.

தோர்பி+கர்ணம்=தோர்பிக்கர்ணம். இதுவே மருவி பிற்காலத்தில் தோப்புக்கரணமாகி விட்டது. தோர்ப்பி என்றால் இரு கைகள்; கர்ணம் என்றால் காது. இரு கைகளாலும் காதுகளைப்பிடித்து ஐந்து முறை உட்கார்ந்து எழுதலே தோப்புக்கரணம். இது ஒருவிதமான நாட்டிய பாவனை. விநாயகருக்கு நாட்டியம், கீதம் என்றால் மிகவும் பிரியம். அதிலும் தோப்புக்கரணத்தால் உள்ளம் மகிழ்ந்து நமது தவறுகளை மன்னித்து வேண்டிய வரங்களை வழங்குவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us