தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : டிச 09, 2016 09:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2016 09:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** சிவன்கோவில் விபூதியை வீட்டுக்கு கொண்டு வரக் கூடாதாமே... உண்மையா?

ஏ.ஆர்.ஜம்புலிங்கம், ஸ்ரீபெரும்புதூர்.

இது அபத்தமான வதந்தி. விபூதிக்கு ஐஸ்வர்யம் என்று பெயருண்டு. சுவாமியின் அருட்பிரசாதமும், சகல ஐஸ்வர்யமும் தரும் விபூதியை வீட்டிற்கு எடுத்து வந்து குடும்பத்தினருக்கு கொடுத்து, மீதியைப் பூஜையறையில் வைத்தால் செல்வ வளம் பெருகும்.

குழந்தையின் முதல் ஜன்ம நட்சத்திர பிறந்தநாள் அமாவாசை அன்று வந்தால் ஆயுள் ஹோமம் நடத்தலாமா?

பாலு, சென்னை.

முதல் பிறந்த நாளை அப்தபூர்த்தி என்றும், அறுபதாவது பிறந்தநாளை ஷஷ்டியப்தபூர்த்தி என்றும் சொல்வார்கள். இரண்டுமே ஜன்ம நட்சத்திரத்தன்று தான் செய்ய வேண்டும். மற்றபடி நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. அமாவாசையாக இருந்தாலும் தோஷமில்லை.

எதிர்கால பலன் அறிய சிறந்தது ஜாதகமா, சாமி ஆடுபவர்களிடம் குறி கேட்பதன் மூலமா?

வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

எதுவாக இருந்தாலும் சிறந்த விற்பன்னர்களிடம் பார்ப்பது நல்லது. இது எல்லாவற்றையும் விட கடவுளே நமக்கு சிறந்த நண்பன். அவனிடம் நம்

எதிர்காலத்தை ஒப்படைத்து விடலாம் என்கிறார்கள் மகான்கள்.

* இரவு நேரத்தில் பூக்களைப் பறித்து வீட்டில் பூஜை செய்யலாமா?

என்.ஜே.கனகேஷ்வரி, திருப்பூர்.

பூஜைக்கு பூப்பறித்தல், அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்தல் போன்றவை சூரிய உதயமான பிறகே செய்ய வேண்டும். முதல்நாள் இரவு பூப்பறித்து மறுநாள் காலை பூஜிப்பது அவ்வளவு சிறப்புடையதல்ல.



பிராண பிரதிஷ்டை என்பதன் பொருள் என்ன?

எம்.கிருபானந்தன், புதுச்சேரி.

பிராணன் என்ற சொல்லுக்கு 'உயிர்' என்பது பொருள். பிறப்பதும், இறப்பதுமாகிய உயிர்களுக்கு இது பொருந்தும். தெய்வங்களுக்கு பிறப்பு இறப்பு கிடையாது. குறிப்பிட்ட தெய்வத்தை கும்பம் அல்லது புதிய பிம்பத்தில் வழிபடும் முன்பு, அத்தெய்வ சக்தியை கும்பத்திலோ அல்லது பிம்பத்திலோ அதற்குரிய பீஜாக்ஷர மந்திரம் மூலம் நிலைநிறுத்தச் செய்வது பிராண பிரதிஷ்டையாகும். நமக்கு உயிர் எப்படி முக்கியமோ அது போல தெய்வத்திற்கு

உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் மந்திரம் முக்கியம். ப்ராணன்- மந்திரம், பிரதிஷ்டை- நிலைநிறுத்துதல் என்பது பிராண பிரதிஷ்டை எனப்படுகிறது.

* சனீஸ்வரருக்கு இரும்பு அகலில் விளக்கு ஏற்றுகிறார்களே...... ஏன்?

ந.திருப்பதிராஜ், ராஜபாளையம்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு உலோகம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சனிக்கு இரும்பு விருப்பமானது. ஆயுள்காரகனாக உள்ள சனீஸ்வரருக்கு இரும்பு அகலில் தீபம் ஏற்றினால், கண்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். அறுபதாம் கல்யாணத்தில் இரும்பு சட்டியில் நெய் விட்டு தானம் செய்வது இந்த அடிப்படையில் தான்.

அறுபடை வீட்டுக்கும் வரிசைப்படி சென்று தான் தரிசிக்க வேண்டுமா?

எஸ்.கண்ணன், மதுரை.

முடிந்தவர்கள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என வரிசைப்படி தரிசிக்கலாம். இப்படித்தான் என்ற கட்டாயம் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us