தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : டிச 23, 2016 10:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2016 10:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** ஈரத்துணியுடன் கோவில் தரிசனம் செய்யக்கூடாது என்பது ஏன்?

ஜி.குப்புசுவாமி, வடபழநி.

உலர்ந்த ஆடைகளை உடுத்தியே சுவாமி தரிசனம் பூஜை மற்றும் சுப விஷயங்களைச் செய்ய வேண்டும். ஈரத்துணியுடன் இறுதிச் சடங்குகளை மட்டும் செய்யலாம். அசுப விஷயத்தில் செய்வதை நற்செயல்களில் செய்வது கூடாது என்பதால் தமிழர் மரபில் இது பின்பற்றப்படுகிறது.

இரவில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது ஏன்?

ஜி.சத்தியநாராயணன், செஞ்சி.

சூரியன் முதலான கிரகங்களைக் கொண்டு ஜோதிடம் பார்க்கப்படுகிறது. சூரியன் மறைந்த பின் கிரகங்கள் வலுவிழந்து விடுவதால் இரவில் பார்க்கும் ஜோதிடம் பலிக்காது என்பர்.

கோவிலுக்குள் பெரியவர்களிடம் ஆசி, திருநீறு பெறலாமா?

எஸ்.முருகேசன், திருத்தங்கல்.

கோவிலில் பிரதானமாக எழுந்தருளியிருக்கும் சுவாமி தவிர மற்ற தெய்வங்களுக்கோ, பெரியவர்களுக்கோ சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது தவறு. பெரியவர்களும் கோவிலில் யாருக்கும் ஆசி வழங்குவது கூடாது. அர்ச்சகர் தவிர மற்ற யாரிடமும் திருநீறு பெறுதல் அல்லது வழங்குதல் மரபை மீறிய செயல். சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவர்கள் இவற்றைப் புரிந்து கொண்டு செயல்படுவது அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்தும்.

* நமதுதேசம் புண்ணிய பூமியாக இருந்தும், ஆன்மிக வழியில் நடந்தும் கூட மக்கள் பெரும்பாலும் துன்பத்தில் சிக்கித் தவிப்பது ஏன்?

சொ.காளிதாசன், பண்ருட்டி.

இயற்கையாக எது நடக்க வேண்டுமோ அது கடவுளின் கட்டளைப்படி நடக்கிறது. மக்கள் அவரவர் கடமையை உணர்ந்தால் எதுவும் துன்பமாக தோன்றாது. இப்பிறவியில் நமக்குரிய வாழ்க்கை முறையை கடவுள் வகுத்துத் தந்திருக்கிறார். அதைப் புரிந்து கொள்ளாமல் இயற்கை நியதிகளை மீறும் போது பாதிப்பு உண்டாகிறது. அவரவர் செய்ய வேண்டிய கடமையைச் சரியாகச் செய்யாமல், செய்யக் கூடாததை விருப்பப்பட்டு செய்வதால் புண்ணிய பூமியான இங்கு துன்பம் விளையும் சூழல் உருவாகி இருக்கிறது.

கடவுள் இல்லை என சொல்பவர்களை ஏன் அவர் தண்டிப்பதில்லை?

சி.யோகராஜன், குனியமுத்தூர்.

அதனால் தான் அவர் கடவுளாக இருக்கிறார்! தூற்றுபவனையும் காக்கும் கருணை உள்ளம் கொண்டவர் என்பது தான் கடவுளுக்குரிய சிறப்பு.

* வாசற்படியில் நின்று பணம், பொருள் கொடுப்பதோ, சாப்பிடவோ கூடாது என்பது ஏன்?

கே.கனகவிஜயன், மதுரை.

வாசற்படி என்பதை விட நிலைப்படி என்பது தான் சரி. வாசல் நிலை மரத்தால் செய்யப்பட்டு அதன் கீழ் நவரத்தினம், தங்கம், வெள்ளி போன்றவை வைத்து, மகாலட்சுமி அதன் வழியாக வீட்டில் நிலைத்திருக்க வேண்டும் என பொருத்துவார்கள். தினமும் அந்த இடத்தில் மெழுகி கோலமிடவேண்டும். அங்கு உட்காரவும் கூடாது. அங்கு நின்று பணம் கொடுப்பதும், சாப்பிட்டு எச்சில் செய்வதும் கூடாது. இவற்றைச் செய்தால் வறுமை ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us