தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : டிச 30, 2016 11:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2016 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஸ்லோகங்களைத் தவறாக உச்சரிப்பதால் பாவம் வருமா? படிக்க சிரமப்படுவோருக்கு மாற்றுவழி உள்ளதா?

வி.விமல், மயிலாப்பூர்.

ஸ்லோகங்கள் பலன் அளிப்பதே உச்சரிப்பின் சிறப்பில் தான். எனவே, யாரிடமாவது கற்றுக் கொண்டு உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆர்வமிருந்தால் கற்றுக் கொள்வது கஷ்டமான விஷயம் கிடையாது.

தெய்வ உருவங்களை வாசலில் கோலமிடுகிறார்களே... சரிதானா?

சு.ரஜினிப்ரியன், களம்பூர்.

இது தவறு. கால் மிதிபடும் விதத்தில் தெய்வ வடிவங்களைக் கோலமிடுவது கூடாது.

* சூரியன் மறைந்த பின் அரசமரத்தைச் சுற்றக்கூடாதாமே... ஏன்?

பி.கே.பாலகிருஷ்ணன், நீலகிரி.

அரசமரத்தின் தெய்வீக சக்தி சூரியன் மறைந்த பின், அங்குள்ள கோவில்களில் ஒடுங்கி விடும். விடியற்காலை பொழுதில் அரசமரத்தைச் சுற்றி வழிபடுவது சிறப்பு. அறிவியல்படி மரங்கள் பகலில் பிராண வாயுவையும், இரவில் கரியமில வாயுவையும் வெளியிடும் தன்மை கொண்டவை. பகலில் அரசமரத்தைச் சுற்றினால் நற்பலனும், இரவில் சுற்றினால் எதிர்மறை பலன் உண்டாகும்.

ஆண் வாரிசு இல்லாத பெற்றோருக்கு பெண் மக்கள் திதி கொடுக்கலாமா?

எஸ்.சரவணக்குமாரி, நாரணாபுரம்.

இந்து மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு, திதி கொடுக்க பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. சாஸ்திரத்தில் இல்லாததைச் செய்தால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையாது. செய்பவருக்கும் பாதிப்பு ஏற்படும். உறவு முறையில் யாராவது ஒரு ஆணுக்கு தர்ப்பையைக் கொடுத்து திதி செய்ய வைக்கலாம். அதாவது ஆண் வாரிசு இல்லாத பெற்றோருடைய மகளின் கையில் இருந்து தர்ப்பையை வாங்கி, உறவுமுறையிலுள்ள ஆண் திதி கொடுக்கலாம். சில இடங்களில் புரோகிதரே இதைச் செய்து கொடுப்பதும் உண்டு.

** நவீன உலகில் குழந்தை வளர்ப்பு பயத்தை ஏற்படுத்துகிறதே! என்ன செய்வது?

எஸ்.சேகர், அம்பத்தூர்.

குழந்தை வளர்ப்பில் முக்கியமானது பெற்றோர் அரவணைப்பு. பொழுது போக்கு சாதனங்களால் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. கல்வி கற்பிப்பதிலும் தவறுகள் நிறைய நடக்கின்றன. பிள்ளைகள் படித்து, பெரிய வேலையில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றே பெற்றோர் நினைக்கிறார்கள். நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி அவர்களுக்குக் கற்றுத் தர விரும்புவதில்லை. பள்ளிப்பாடத்திலும் பண்பாடு சார்ந்த விஷயங்கள் அறவே இல்லை. இதனால் குழந்தை வளர்ப்பில் பயப்படும் நிலை உருவாகி விட்டது.

குழந்தைகள் தொந்தரவு செய்யாமல் இருக்க அலைபேசி, 'நெட்டில்' விளையாடக் கற்றுக் கொடுப்பதைக் கைவிட்டு பெற்றோர் அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பாடத் திட்டத்தில் கலாசாரம், பண்பாடு சார்ந்த இலக்கியங்களைத் தாய் மொழியில் கற்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us