தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : பிப் 17, 2017 11:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2017 11:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்ப, துன்பத்திற்கு முற்பிறவியில் செய்த புண்ணியம், பாவம் தான் காரணமா?

எம்.ரங்கநாதன், சேத்தியாதோப்பு.

ஆம்...முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியம் வைப்புக்கணக்கு போல உள்ளது. இந்த கணக்கை 'சஞ்சிதம்' என்று சாஸ்திரம் சொல்கிறது. இது தீரும் வரை உயிர்கள் பிறந்தும், இறந்தும் கொண்டே இருக்கும். நமது பாவ, புண்ணியத்திற்கு 'ப்ராரப்தம்' என்று பெயர். இதுவே சுருங்கி 'பிராப்தம்' என்று பேச்சு வழக்கில் உள்ளது. 'அவர் பிராப்தம் சந்தோஷமாக இருக்கிறார்' என்றும், 'நான் கொண்டு வந்த பிராப்தம் அவ்வளவு தான்... கஷ்டப்படுகிறேன்' என்றும் சொல்கிறோமே! அதற்கு காரணம் நாம் செய்யும் புண்ணிய, பாவங்கள் தான்.

சுவாமியை தரிசித்து விட்டு தானம் அளிப்பது அல்லது தானம் அளித்த பின் கடவுளைத் தரிசிப்பது எது நல்லது?

வி.குப்புசாமி, வடபழனி.

இரண்டும் சரி தான். கோவிலுக்குச் சென்றால் சுவாமி தரிசனம் முடியும் வரை சிந்தனை சிதறாமல் இருக்க வேண்டும் அவ்வளவு தான்.

** குளிகை நேரம் என்றால் என்ன? அதில் என்ன செய்யவேண்டும்?

ஆர்.ஜெயபாரதி, சாத்தூர்.

சூரியன் முதல் சனி வரை ஏழு கிரகங்களுக்கும் உருவம் உண்டு. ராகு, கேது இரண்டும் நிழல் கிரகங்களாக உள்ளன. இவை தவிர குளிகை, மாந்தி என்ற கிரகங்களும் உண்டு. இதில் குளிகைக்கு மட்டும் ராகு காலம் போல் தினம் ஒன்றரை மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது என்பது விதி.

கோவில்களில் கிரானைட் கற்களால் சன்னிதி கட்டப்படுகிறது. ஆகமம் இதை ஏற்கிறதா?

எஸ்.புவனா, சூளைமேடு.

கருங்கல்லிலிருந்து, கிரானைட் எடுக்கப்படுவதால் சன்னிதி கட்டுவதில் தவறில்லை. பீங்கான் வகையைச் சார்ந்த டைல்ஸ் கற்கள் தான் கூடாது.

* குளவி கட்டிய கூட்டைக் கலைப்பது பாவம் தானே!

ரா.மல்லிகா, காரைக்குடி.

கூடு கட்டி அதில் புழுக்கள் ஈன்ற நிலையில் இருக்கும் போது கலைப்பது பாவம். பிறகு குளவி அக்கூட்டை உபயோகிக்காத நிலையில் கலைப்பதில் தவறு ஒன்றுமில்லை. குறிப்பாக வீட்டில் பெண்கள் கருவுற்ற நிலையில், குளவிக் கூட்டை கலைக்கக் கூடாது.



* கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள பெரிய படிக்கட்டை மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஏன்?

அ.சமீனா, நெய்வேலி.

கோவில் வாசல் நிலைப்படியான பெரிய படியில், மூலஸ்தான தெய்வத்தின் பரிவார தேவதைகள் உள்ளனர். இவர்கள் மூலவரைத் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே இந்த படிக்கட்டை மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us