தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஏப் 06, 2017 12:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2017 12:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* போதாயன அமாவாசை என்றால் என்ன?

டி.கே.சுகுமாறன், குனியமுத்தூர்.

'போதாயன சூத்ரம்' என்ற நூலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது. போதாயனரின் கணக்குப்படி, அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி, அன்றைய சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து, துவிதியை துவங்கி, வானில் சந்திரப்பிறையும் தெரியும் எனக் கணக்கிட்டால்,

அமாவாசையின் முதல்நாளான சதுர்த்தசி அன்றே பிதுர்க்கடனை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். அதுவே போதாயன அமாவாசை. ஆபஸ்தம்பரின் கணக்குப்படி பிதுர்க்கடன் செய்யும் போது அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பது கருத்து. இதைப் பின்பற்றுபவர்கள் அமாவாசை திதியிருக்கும் அன்றே பிதுர்க்கடன் செய்கிறார்கள்.

அக்னி ஹோத்ரம் என்றால் என்ன? வீட்டில் செய்யலாமா?

கண.கணேசன், திருச்சுழி

ஆஹவனீயம், தட்சிணம், கார்ஹபத்யம் என்ற பெயருள்ள மூவகை அக்னியை பரம்பரை பரம்பரையாக அணையாமல் பாதுகாத்து, அந்தணர்கள் வீட்டில் செய்யும் வேள்வியே அக்னி ஹோத்ரம். இதை எல்லார் வீட்டிலும் செய்ய இயலாது. இதற்கு ஹோமம் என்றும் பொருள் உண்டு. கணபதி ஹோமத்தை வீட்டில் செய்யலாம்.

* 'நான்' என்னும் நிலையில் இருந்து 'நாம்' என்னும் நிலைக்கு வர என்ன செய்யவேண்டும்?

ஏ.ஜி.பானு, நெய்வேலி.

எதுவும் என்னுடையது இல்லை. எதுவும் நிரந்தரம் இல்லை என்ற விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டேயிருங்கள். நான், நாம் என்ற இரண்டையும் கடந்து 'எல்லாம் அவன் செயல்' என்ற மேலான நிலைக்கு வந்து விடுவீர்கள்.

சிவன் சன்னிதியை எத்தனை முறை சுற்றிவர வேண்டும்?

பொன்.எத்திராஜ். திருக்கழுக்குன்றம்.

மூன்றுமுறை வலம் வந்து, ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

வடக்கு நோக்கி படுக்கக் கூடாது என்கிறார்களே...!

எம்.சகுந்தலா, மதுரை.

சிவனின் ஆணைப்படி, வடக்கில் தலை வைத்துப் படுத்திருந்த யானையின் தலையை அறுத்து விநாயகருக்கு சிவகணங்கள் பொருத்தியதாகவும், அதனால் வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என புராணத்தில் காரணம் சொல்வர். காந்தப்புலம் அதிகமாக இருக்கும் வடக்கு நோக்கி படுத்தால் மூளை பாதிப்பு உண்டாகும் என அறிவியல் சொல்கிறது.

கங்கை தீர்த்தம் வீட்டில் இருந்தால் என்ன செய்வது?

என்.ஜே.ரவி விக்னேஷ், திருப்பூர்.

மூடிய செம்பில் இருந்தால் தினமும் பூஜை செய்யலாம். நிறைய இருந்தால் கோவிலிலுக்கு அபிஷேகத்துக்குப் பயன்படுத்த கொடுக்கலாம்.

பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் விளக்கேற்றி வழிபடலாமா?

கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.

கணம்புல்லார், நமிநந்தியடிகள் ஆகியோர், சிவன் சன்னிதியில் விளக்கேற்றிய புண்ணியத்தால் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர். அவர்கள் காட்டிய வழியைப்

பின்பற்றி, ஆண்கள் வீட்டிலும், கோவிலிலும் விளக்கேற்றி வழிபடலாம்.



** ஆடம்பரமாக அலங்கரித்து கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

ஏ.கல்யாணராமன், கள்ளக்குறிச்சி.

பட்டு உடுத்தி, நகை அணிந்து கோவிலுக்கு வருவதில் தவறில்லையே. அம்பாளுக்கே பட்டும், நகைகளும் அணிகிறோமே! அவரவர் தகுதிக்கேற்ப

அலங்கரிப்பது தவறல்ல. கலாசாரத்துக்கு புறம்பான ஆடை தான் அணியக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us