தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மே 04, 2017 03:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2017 03:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

  வயதில் சிறியவர்கள் காசிக்கு செல்லலாமா?

வி.சாமிநாதன், ஆதம்பாக்கம்

ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று காசி. இங்கு, கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசிக்க வயது தடை இல்லை. சிறுவயதில் காசி செல்வதால் வாழ்க்கைப்பாதை நேர்த்தியாக அமையும்.

இரட்டைத் திரியிட்டு தான் விளக்கேற்ற வேண்டுமா?

லட்சுமி, பெங்களூரு

இல்லை. விளக்கின் அமைப்பிற்கு தகுந்தாற் போல ஒரு திரியிட்டு விளக்கேற்றலாம்.



* பூஜையின் போது சுவாமிக்கு கண்ணாடி காட்டுவது ஏன்?

ஏ.ஆர்.சரவணப்பெருமாள், முருகம்பாக்கம்.

இறைவனுக்கு செய்யும் அலங்காரத்தை அவரும் ரசித்துப் பார்க்கட்டும் என்ற அன்பின் காரணமாக இவ்வாறு செய்வர். சுவாமிக்குரிய ராஜ உபசாரங்களில் கண்ணாடி காண்பிப்பது முக்கியமானது. இது ஒரு மங்கலப்பொருள்.

விநாயகருக்கு உகந்த வெள்ளெருக்கை வீட்டில் வளர்க்கலாமா?

கே.நாச்சியப்பன், விருதுநகர்.

எருக்கு, ஊமத்தை போன்றவை வீட்டில் வளர்க்கக்கூடாது. கோவில் நந்தவனம், தோட்டங்களில் இருக்கும் எருக்கம்பூவை விநாயகருக்கு சாத்தி வழிபடலாம்.

குழந்தைகள் பூஜையின் நடுவில் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டால் என்ன செய்வது?

ஜி.மீராபாய்,விழுப்புரம்.

இப்படி நடக்காமல் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டியது தான். அறியாமல் நடந்தாலோ, பால் பற்கள் விழாத குழந்தைகள் (௬ வயது வரை) சாப்பிட்டாலோ தோஷம் இல்லை.

** மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் என்ன?

ம.வேல்முருகன், புதுச்சேரி

வழிபாடு, தானம், தர்மம் போன்ற நற்செயல்களை மனிதனால் மட்டுமே செய்ய முடியும். அதன் மூலம் புண்ணியம் பெற்று, அந்த புண்ணியத்தை கடவுளுக்கே வழங்கும் பக்குவநிலையை மனிதன் அடைந்ததும், கடவுளே நேரில் வந்து மோட்சம் என்னும் பேரின்பம் வழங்குவார். மனிதப் பிறவியின் நோக்கம் கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பதே.

* தாலி கட்டும் போது மூன்று முடிச்சு போடுவது ஏன்?

கா.சஞ்சய்ராஜ், வெண்கரும்பூர்.

தாலி கட்டும் போது 'மாங்கல்யம் தந்துனானேன....' என்னும் மந்திரம் சொல்வர். இதன் பொருள், "மங்களகரமான பெண்ணே! இந்த மாங்கல்ய கயிற்றினை உன் கழுத்தில் கட்டுகிறேன். இதன் மூன்று முடிச்சுகள் என்னை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்கட்டும். நீயும் நூறாண்டு காலம் வாழ்வாயாக. நாம் இணைந்து இல்லறம் என்னும் தர்மத்தைச் செய்வோமாக" என்பதாகும். மணமகன், மணமகளிடம் இதைச் சொல்லி மூன்று முடிச்சு இட வேண்டும்

என்கிறது சாஸ்திரம்.



நல்லவர்களை கடவுள் சோதிப்பது ஏன்?

டி. முத்துச்சாமி, புதுச்சேரி

சோதனை என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன் மூலம் நல்லவனாக வாழ்வதற்கான பயிற்சி உண்டாகிறது. பயிற்சியை தொடங்கும் போதே, ஒருவரைப் பக்குவப்படுத்த முடியும் அல்லது முடியாது என்பது கடவுளுக்குத் தெரியும். பத்தரை மாற்றுத் தங்கமாகும் என்று தெரிவதால் தானே தங்கத்தை நெருப்பில் இடுகின்றனர். இதுபோல, நல்லவருக்கு சோதனை தந்து கடவுள் பக்குவப் படுத்துகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us