தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 15, 2021 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2021 03:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* செல்வ வளத்துடன் வாழ யாரை வழிபடலாம்

எம்.ராஜேஷ், வில்லிவாக்கம்

வெள்ளிக்கிழமை மாலை 5:30 - 7:30 மணி வரை விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் அல்லது 'தனம் தரும் கல்வி தரும்' என்று தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலை பாடுங்கள்.

* நிம்மதியாக வாழ...

எம்.உஷா, வானுார்

மற்றவர் அந்தரங்க விஷயத்தில் தலையிடுவது, பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவது, தற்பெருமை பேசுவது, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது' என தாழ்வு மனப்பான்மையால் வருந்துவது போன்ற தீயபண்புகளை விட்டு, 'கடவுள் கொடுத்த வாழ்க்கையை ரசிப்பேன்' என்ற எண்ணமிருந்தால் நிம்மதியாக வாழலாம்.

* சொர்க்கம், நரகம் என்பது கற்பனை தானே...

டி.அனு, தக்கலை

கற்பனை இல்லை. பேராசை, பொறாமை, வஞ்சகத்தை கைவிட்டு நிம்மதியுடன் வாழ்வதே சொர்க்கம். இதை உணராவிட்டால் வாழ்வு நரகமாகும். செய்த புண்ணிய, பாவத்திற்கு ஏற்ப சொர்க்க, நரகம் கிடைக்கும்.

* உழவாரப்பணியால் சிவனருளைப் பெற முடியுமா

எம்.சைலேஷ், வடக்கிபாளையம்

நிச்சயமாக. ஆடம்பர பூஜையை விட எளிய சேவையே சிவனுக்கு பிடித்தமானது.

நவக்கிரகத்தை எல்லா நாளும் சுற்றலாமா

டி.சாத்வீகா, சோழவந்தான்

சுற்றலாம். ஏழரை, அஷ்டம, ஜென்மச்சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமையில் சுற்றினால் கூடுதல் பலன் கிடைக்கும்.

நந்தீஸ்வரருக்கு தேங்காய்த்தீபம் ஏற்றலாமா

கே.நிரஞ்சனி, திசையன்விளை

கூடாது.

நல்ல பாம்பைக் கொல்வது பாவமா

எம்.சந்தோஷ், சுரண்டை

பாம்பைக் கொன்றால் நாக தோஷம் ஏற்படும். திருநாகேஸ்வரம்(குடந்தை), திருப்பாம்புரம்(திருவாரூர்)போன்ற தலங்களைத் தரிசிக்க பாவம் விலகும்.

சுமாராகப் படிக்கும் என் மகனுக்கு பரிகாரம் சொல்லுங்கள்

ஆர்.சுதர்சன், உத்தமபாளையம்

'என் மகன் சுமாராகப் படிக்கிறான்' என எதிர்மறை சிந்தனையை கைவிடுங்கள். உங்கள் ஊக்கமே அவனது வளர்ச்சிக்கு முதல்படி. கல்விக்கடவுளான சரஸ்வதி அல்லது லட்சுமி ஹயக்ரீவரை புதன்கிழமையன்று வழிபடுங்கள்.

பூஜை செய்யும் நேரத்தில் விளக்கு அணைந்தால் அபசகுனமா...

பி.வசுந்தரா, காட்டுமன்னார்கோவில்

இல்லை. பயம் வேண்டாம். காற்றடித்தால் விளக்கு அணைவது இயற்கை. மீண்டும் விளக்கேற்றி பூஜையைத் தொடருங்கள். நல்லதே நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us