
* ஏழரைச்சனியின் போது திருமணம் நடத்தலாமா
வி.யாழினி, சென்னை
நடத்தலாம். இதற்காக திருமணத்தை தள்ளி வைக்க இயலாது. மணமக்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஏழரைச்சனி இருக்கக் கூடாது.
* பெற்றோரின் குலதெய்வங்களில் யாருக்கு முதலிடம்
கே.ரகு, விருதுநகர்
தந்தைவழி குலதெய்வத்திற்கே முதலிடம். பொங்கல் வைத்தல், முடிகாணிக்கை உள்ளிட்டவைகளைச் அதற்கே செய்ய வேண்டும். தாய்வழி தெய்வத்தை வழிபட்டால் போதும். பெண்களைப் பொறுத்தவரை கணவர் வழி தெய்வத்திற்கு முதலிடம். பிறந்தவீட்டு தெய்வத்தை வழிபட்டால் போதும்.
* திருமணத்தை கோயிலில் நடத்தினால் கிரக தோஷம் நீங்குமா
சி.மித்ரா, பெங்களூரு
இதில் என்ன சந்தேகம்! கடவுளின் அருட்பார்வையால் தோஷம் நீங்கும்.
எனது மகன் வாய்குழறியபடி பேசுகிறானே... என்ன செய்யலாம்
ஆர்.சந்தோஷி, சேரன்மாதேவி
பேச்சியம்மனுக்கு வெள்ளிக்கிழமையன்று விளக்கேற்றுங்கள். கூழாங்கல்லை வாயில் அடக்கியபடி பேச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
* ஒற்றைக்காலில் நிற்கக் கூடாதாமே...
எம்.பவித்ரா, கடலுார்
ஒற்றைக்காலில் நின்றால் கடன் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.
மவுனவிரதம் இருப்பதால் என்ன கிடைக்கும்
வி.நிரஞ்சன், பள்ளியாடி
மவுன விரதம் இருப்பதால் குழப்பம் நீங்கி மனவலிமை அதிகரிக்கும்.
வேண்டுதல் நிறைவேறாத நிலையில் காணிக்கையை என்ன செய்வது
எல்.காவ்யா, திருப்பூர்
உண்டியலில் செலுத்துங்கள். கடவுள் அருளால் விரைவில் வேண்டுதல் நிறைவேறும்.
அர்ச்சனை, அபிஷேகம் - சிறந்தது எது
எஸ்.கனிஷ்கா, திருவள்ளூர்
அர்ச்சனை சிறந்தது. அபிஷேகத்துடன் அர்ச்சனை மிகச் சிறந்தது.
கடவுள் இல்லை என மறுப்பவர்களை அவர் ஏன் தண்டிப்பதில்லை
கே.தர்ஷினி, மதுரை
தண்டிக்காததால் தான் அவரை வணங்குகிறோம். துாற்றுபவனையும் காப்பவர் என்பதே அவரின் சிறப்பு.
அம்மனுக்கு சாத்திய புடவைகளை விலைக்கு வாங்கலாமா
பி.வினோதா, கள்ளக்குறிச்சி
வாங்கலாம். அம்மனுக்கு சாத்திய பூவை தலையில் அணிவது போல நல்ல நாளில் புடவையை அணியலாம்.

