தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 24, 2022 04:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2022 04:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜெயஸ்ரீ, கடலுார்

* சுபநிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது பூனை குறுக்கே வந்தால் ஆகாதா?

பூனை குறுக்கே வருவது சகுனத்தடை. இரண்டு நிமிடமாவது அமருங்கள். பின் தண்ணீர் குடியுங்கள். விநாயகரை வழிபட்டு புறப்படுங்கள்.

எல்.வசந்தா, திருப்பூர்

* கோயில் திருப்பணியாக எதைச் செய்யலாம்?

கோயிலைத் துாய்மை செய்தல், நந்தவனத்தில் பூப்பறித்து மாலை தொடுத்தல், விளக்கேற்ற எண்ணெய் கொடுத்தல் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபடலாம். கோயிலில் திருப்பணி நடந்தால் பணஉதவி செய்யலாம்.

நா.குழந்தைவேலு, பெங்களூரு

* ஒரே மாதத்தில் அமாவாசை இருமுறை வந்தால் எப்போது தர்ப்பணம் செய்யலாம்?

ஒரே மாதத்தில் இருமுறை அமாவாசை வந்தால் இரண்டிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசை இரண்டு நாள் தொடர்ந்தால் 'சர்வ அமாவாசை' எனக் குறிப்பிடப்பட்ட அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ரா.ஜெயா, திருநெல்வேலி

* தலவிருட்ச மரத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?

மூலவர் இருக்கும் கருவறை வளாகத்திற்குள் உள்ள மரம் தலவிருட்சம். இதைப் பற்றிய குறிப்பு தல வரலாற்றில் இருக்கும். இதை தேர்வு செய்யும் உரிமை நமக்கு இல்லை.

கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு

* கோத்திரம் என்றால் என்ன?

வேத காலத்தில் நம் முன்னோர்கள் ரிஷிகளாக வாழ்ந்தார்கள். எந்த ரிஷியின் பரம்பரையில் ஒருவர் பிறக்கிறாரோ அந்த ரிஷியின் பெயரே அவருக்கான கோத்திரம்.

கே.மீனா, புதுச்சேரி

* அம்மனுக்கு சாற்றும் எலுமிச்சை மாலையில் எத்தனை பழங்கள் இருக்க வேண்டும்?

27, 54, 108 என்ற எண்ணிக்கையில் பழங்கள் இருக்க வேண்டும்.

எம்.செல்வம், சென்னை

* பூஜையின் போது தனியாக திருவாசகம் பாடக் கூடாதா?

அப்படி எந்த விதியும் இல்லை. தனிமையில் மனம் உருகி பாடி வழிபட்டால் நல்லது தானே.

ஆ.சங்கரசுப்ரமணி, முறப்பநாடு, துாத்துக்குடி

* சாப்பிட்ட எச்சில் இலையை பசுவுக்குக் கொடுக்கலாமா?

எச்சில் இலையைக் கொடுக்க கூடாது. பசு புனிதமானது என்பதால் அதற்கு கோபூஜை செய்கிறோம்.

வி.வாசுதேவன், கோவை

* தொடர்ந்து பாவத்தில் ஈடுபடுபவர் பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா?

பலன் கிடைக்காது. பரிகாரத்தால் பாவம் தீரும் என நினைப்பதே தவறு. மனம் திருந்துவது ஒன்றே தீர்வு.

கே.ராகவன், சிவகாசி

* வளர்பிறை, தேய்பிறை இதில் எப்போது திருமணம் நடத்தலாம்?

* வளர்பிறை பஞ்சமி முதல் தேய்பிறை பஞ்சமி வரை - முதல் தரம்.

* தேய்பிறை சஷ்டி முதல் தேய்பிறை தசமி வரை - இரண்டாம் தரம்.

* தேய்பிறை ஏகாதசி முதல் வளர்பிறை சதுர்த்தி வரை - மூன்றாம் தரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us