தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 19, 2022 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2022 08:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்.பாரதி, புதுடில்லி

*செருப்பு அணிந்தபடி கோலமிடலாமா...

கூடாது. அது கோலத்தை அவமதிப்பதாகும்.

கே.விவேக், வானுார், விழுப்புரம்

*விநாயகருக்கு தேங்காய் மாலை, பைரவருக்கு மிளகாய் மாலை சாற்றுகிறார்களே...?

தேவையில்லை. நடைமுறையில் இல்லாத புதுப்பழக்கம் அண்மைக் காலத்தில் புகுத்தப்பட்டு விட்டது.

வி.வனஜா, குன்னுார், நீலகிரி

*விவாகரத்து பெற்ற தம்பதி இணைந்தால் தாலி அவசியமா?

பெண்கள் தாலியை கழற்றாமல் இருப்பதே நல்லது. கழற்றி இருந்தால் நல்லநாளில் மீண்டும் அணிவது அவசியம்.

சி.மணிவண்ணன், பெங்களூரு

*செய்வினையில் இருந்து விடுபட யாரை வழிபடலாம்?

தினமும் பைரவர், சரபேஸ்வரர், சனிக்கிழமையில் சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.

எம்.ராதா, ஆவடி, திருவள்ளூர்

*எந்த வயதில் காசி யாத்திரை செல்வது நல்லது?

எந்த வயதிலும் செல்லலாம்.

டி.வசந்தி, பழநி, திண்டுக்கல்

*சாஸ்திரம், சம்பிரதாயத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றலாமா?

கூடாது. வருங்கால தலைமுறையினர் நம் தர்மத்தை பின்பற்ற முடியாமல் போகும்.

வி.சங்கரி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி

*முளைப்பாரி வளர்க்கும் போது பின்பற்ற வேண்டியவை என்ன?

மனத்துாய்மை, ஒழுக்கம், விரதம், தினசரி வழிபாடுகளை முறையாக பின்பற்றுங்கள்.

ஆர்.ரதி, களக்காடு, திருநெல்வேலி

*அலகு குத்துதல், தீ மிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல் இவற்றை பின்பற்றுவது சரியா?

தீ மிதித்தல், அலகு குத்துதல் பாரம்பரியமானவை. ஆனால் தலையில் தேங்காய் உடைப்பதை தவிர்ப்பது நல்லது.

பி.தமயந்தி, மேலுார், மதுரை

*கோயிலில் விற்கும் நெய் தீபத்தை பயன்படுத்தலாமா?

தரமற்ற நெய்யை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக எண்ணெய் தீபங்களை பயன்படுத்தலாம்.

ஆர்.மஞ்சுளா, வேளச்சேரி, சென்னை

*எங்களின் குலதெய்வம் கோயிலில் பாலாலயம் செய்துள்ளனர். நேர்த்திக்கடன் செலுத்தலாமா?

செலுத்தலாம். திருப்பணிக்கு பொருளுதவி செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us