
வி.உமா, நங்கநல்லுார், சென்னை.
*குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
தாத்தா, பாட்டி, குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் பெயரை வையுங்கள். பொருத்தமற்ற பெயர் வைப்பதை தவிருங்கள்.
கி.மீனாட்சி, சேர்ந்தமரம், தென்காசி.
*தெய்வ நம்பிக்கை மிக்க என் மகனுக்கு நன்மை ஏதும் நடக்கவில்லையே?
நம்பிக்கை இழக்காமல் முயற்சி செய்யுங்கள். அவருக்கு கடவுளின் அருள் நிச்சயம்.
செ.செல்வி, கொட்டாம்பட்டி, மதுரை.
*சீலைக்காரி வழிபாடு வீட்டில் இருப்பது அவசியமா...
அவசியம். சுமங்கலியாக இறந்தவர்களின் நினைவாக அவர்களின் சேலையை வைத்து வழிபடுவர். இைதயே 'சீலைக்காரி வழிபாடு' என்பர். குலதெய்வத்திற்கு நிகரான இந்த வீட்டுத் தெய்வத்தை வழிபட சந்ததி நலமுடன் வாழும்.
கு.திருஞானசம்பந்தம், கீழ்ப்பெரும்பாக்கம், விழுப்புரம்.
*அம்மை வந்த வீட்டில் பின்பற்ற வேண்டிய முறைகள் என்ன?
அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு வராமல் இருக்க வாசலில் வேப்பிலை கட்ட வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்தல், சவரம் செய்தல், நகம் வெட்டுதல் கூடாது. மிளகாய், கடுகு, சீரகம், எண்ணெய் சேர்த்து தாளிக்கக் கூடாது. மாரியம்மன் எழுந்தருளியதாக நினைத்து சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும்.
எஸ்.ரவி, பெங்களூரு.
*ஆரத்தி எடுப்பவருக்கு பணம் தர வேண்டுமா?
பணம் தருவது நம் சம்பிரதாயம். இதுவும் தெய்வீகமான விஷயமே.
எம்.ராஜசேகர், சக்குர்பூர், புதுடில்லி.
*இன்றைய இளைஞர்கள் ஆன்மிகத்தை விரும்பவில்லையே...
அருளாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதும், அரசியல்வாதிகளின் நாத்திக பேச்சை தவிர்ப்பதும் அவசியம். துணிவு, மகிழ்ச்சி, விடாமுயற்சி, நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டுவது ஆன்மிகம் மட்டும் தான் என்பதை புரிந்து கெள்ளுங்கள்.
எஸ்.கமலா, ேகாயம்புத்துார்.
*ஆபத்து வரும் போது முதலில் வந்து காப்பது குலதெய்வமா, இஷ்ட தெய்வமா?
பணம் தருவது நம்முடன் இருந்து காப்பது குலதெய்வம். அழைத்தால் வருவது இஷ்ட தெய்வம். எனவே குலதெய்வத்திற்குத் தான் முதலிடம்.
எல்.மோகன்ராம், நித்திரவிளை, கன்னியாகுமரி.
*ஒருவர் இறந்ததில் இருந்து மாதம்தோறும் தர்ப்பணம் செய்யலாமா?
மாதம்தோறும் மாசியம் எனும் சிராத்தத்தை இறந்ததில் இருந்து செய்ய வேண்டும். முதல் ஆண்டு சிராத்தம் முடிந்த பிறகே மற்ற தர்ப்பணங்கள் செய்யலாம். தந்தை இல்லாதவருக்கு மட்டுமே இது பொருந்தும்.

