sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 20, 2023 10:37 AM

Google News

ADDED : பிப் 20, 2023 10:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி.கவிதா, திருப்புவனம், சிவகங்கை.

*மணவறையில் பந்தல்கால் நடுவது ஏன்?

யக்ஷி, தமீ என்னும் தெய்வங்களை வழிபடுவதற்காக மணமேடையின் வடகிழக்கு மூலையில் பந்தல்கால் நடுகிறோம். இவர்களை வழிபடும் மணமக்கள் நலமுடன் வாழ்வர்.

கே.ரதி, சென்னை.

*பறவையைக் கூண்டில் வளர்த்தால்...

பறவையைக் கூண்டில் வளர்த்தால் தோஷம் ஏற்படும்.

ஆர்.அனிதா, மடத்துக்குளம், திருப்பூர்.

*ஒருமுக ருத்திராட்சத்தை யார் அணியலாம்?

எல்லோரும் அணியலாம். ருத்திராட்சம் அணிந்தவர்கள் திருநீறு பூசி, சிவாயநம என சொன்னால் இந்தியாவுக்கே நன்மை சேரும்.

வி.கீதா, ஏரல், துாத்துக்குடி.

*கர்ப்ப கிரகத்தில் எத்தனை முக தீபம் ஏற்றலாம்?

ஐந்துமுக தீபம் ஏற்றுவது சிறப்பு.

எஸ்.துரைச்சாமி, குளச்சல், கன்னியாகுமரி.

*நல்லவர்களின் லட்சணம் என்ன?

உண்மை, நேர்மை, சுயஒழுக்கம், தர்மசிந்தனை உள்ளவர்களே நல்லவர்கள்.

எம்.வைசாலி, காஞ்சிபுரம்.

*தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாதாமே ஏன்?

தென்திசையின் அதிபதி எமன். முன்னோர்களின் பிதுர்லோகம் இருப்பதும் அங்குதான். அதனால் கிழக்கு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றுங்கள்.

எம்.வினோதினி, பெங்களூரு.

*செய்த உதவியை பிறரிடம் சொல்லக் கூடாதா...

பிறரிடம் இதை சொன்னால் அதற்கான புண்ணியம் நம்மை விட்டு விலகும்.

எம்.பிரசாந்த், கல்லுப்பட்டி, மதுரை.

*பணத்தாசையால் சிலர் அலைகிறார்களே...

பணத்தை சம்பாதிக்கவும் வேண்டும். அதே சமயம் தர்மமும் செய்ய வேண்டும். பணத்தாசை பிடித்தவர்கள் நிம்மதியை இழப்பர்.

எம்.கோகிலா, பப்பன்கிளேவ், டில்லி.

*ஒரே நாளில் இரண்டு துக்க வீட்டிற்குச் செல்லலாமா...

கூடாது. முடியாத சூழலில் முதல் வீட்டில் துக்கம் விசாரித்து வந்ததும் குளியுங்கள். பிறகு அடுத்த வீட்டிற்கு சென்று திரும்பியதும் மீண்டும் குளியுங்கள்.

சி.அவினாஷ், சிதம்பரம், கடலுார்.

*கோயிலுக்குள் இறப்புச் செய்தியைக் கேட்டால்...

துக்க செய்தியை கேட்டதும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுங்கள். (கோயிலுக்குள் அலைபேசி தேவையா)






      Dinamalar
      Follow us