
எல்.கமலா, திருத்தணி, திருவள்ளூர்.*சித்தர்களை வழிபட்டால் நினைத்தது நிறைவேறுமா?
நிறைவேறும். சித்தர்களை வழிபடுவதுடன் அவர்களின் உபதேசங்களை பின்பற்றினால் இன்பமாக வாழலாம்.
கே.ராகவி, கன்னிவாடி, திண்டுக்கல்.
*கவுரி பஞ்சாங்கம், ஹோரை, லக்னம் இவற்றில் எதை பின்பற்றலாம்?
கவுரி பஞ்சாங்கம், ஹோரை, லக்னம் என பஞ்சாங்கத்தில் நல்ல நேரங்கள் பல உள்ளன. அனைத்தும் சரியானதே. ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.
க.அம்பலவாணன், கடையம், தென்காசி.
*சிவன் கோயில் திருநீறை வீட்டுக்கு எடுத்து வரக் கூடாதாமே...
இது
தவறான கருத்து. சிவனுக்குச் சொந்தமான பொருட்களை அபகரிப்பவர்களைக்
கண்டிக்க, 'சிவன் சொத்து குலநாசம்' என்பார்கள். ஆனால் அர்ச்சனை செய்த
திருநீறு, குங்கும பிரசாதத்தை எடுத்து வரலாம்.
இ.அதுல்யா, சாத்துார், விருதுநகர்.
*கருவறை, கொடிமரம், கோபுரம் இவற்றுக்கு சக்தி அதிகமாமே...
ஆமாம். தெய்வீக ஆற்றலை கவரும் தன்மை இவற்றுக்கு அதிகம்.
ப.கோவிந்தன், கருவடிக்குப்பம், புதுச்சேரி.
*தீட்சை பெற யாரை அணுகலாம்?
தினமும் சிவபூஜை செய்பவர்களை அணுகுங்கள்.
பி.ஐயப்பன், ராமநாதபுரம், கோயம்புத்துார்.
*அரைஞாண் கயிறு அணிய ஆண்களுக்கு வயது வரம்பு உண்டா?
வயது வரம்பு இல்லை.
பி.அனந்தநாராயணன், பெங்களூரு.
*கோயிலில் உள்ள வாகனம் பழுதாகி விட்டது. புதிதாக செய்து கொடுக்கலாமா?
செய்து கொடுத்தால் உங்கள் சந்ததிக்கே புண்ணியம் சேரும்.
ஆ.மணிமாறன், மயிலாப்பூர், சென்னை.
*நீண்ட காலம் திருப்பணி நடக்காத கோயிலை சீர்படுத்த விரும்புகிறேன். என்ன செய்யலாம்?
சீர்படுத்த விரும்புவதே கடவுளின் அருள்தான். துணிச்சலுடன் ஈடுபடுங்கள். அக்கோயில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து செயல்படுங்கள்.
எஸ்.கனகராஜ், நாகர்கோவில், கன்னியாகுமரி.
*கண் முன்னே சிலர் பைத்தியமாக திரிகிறார்கள். பார்த்தால் மனம் வலிக்கிறதே...
நல்லவர்கள் மனம் வருந்தவே செய்யும். பாதிக்கப்பட்டவர் நலம் பெற உதவுங்கள்.
பி.அஜந்தன், டில்லி.
*அமாவாசை தவிர்த்த மற்ற நாட்களில் திதி கொடுக்கலாமா?
தமிழ்
மாதப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, உத்திராயணம்(தை1), தட்சிணாயனம்(ஆடி1)
என ஓராண்டில் வரும் 96 புண்ணிய காலங்கள், சூரிய, சந்திர கிரகண நாட்கள் திதி
கொடுக்க ஏற்றவை.

