sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 27, 2023 11:07 AM

Google News

ADDED : அக் 27, 2023 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.நிஜந்தன், பிராட்வே, சென்னை.

*பசுவுக்கு கீரை கொடுத்தால்...

முன்வினை பாவம் போவதோடு சத்தான பாலும் கிடைக்கும். இதை 'யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை' என்கிறது திருமந்திரம்.

வி.வேல்முருகன், ஸ்ரீவைகுண்டம், துாத்துக்குடி.

*பூர்ண கும்ப மரியாதை என்கிறார்களே...

துறவி, சான்றோருக்கு வழங்கும் கவுரவம் இது. பூரணம் என்றால் 'முழுமை'. நிறைகுடத்தை ஏந்தி மங்களகரமாக வரவேற்பதே இதன் நோக்கம்.

பி.விஜய்சாரதி, ஹலசூரு, பெங்களூரு.

*அதிகாலையில் நல்ல கனவு வந்தால் அதன் பின் துாங்கக் கூடாதாமே...

துாங்கக் கூடாது. நீங்கள் கண்ட கனவு பலிக்க அதற்கான முயற்சி அவசியம். கடவுளின் அருள் இருந்தால் வெற்றி நிச்சயம்.

ஆர்.சுஜாதா, சிங்கம்புணரி, சிவகங்கை.

*சுதர்சன ஹோமம் என்பது என்ன?

மகாவிஷ்ணுவின் ஆயுதமான சுதர்சனத்தை பூஜிப்பது சுதர்சன ஹோமம். நோய், வழக்கு, பயம், திருஷ்டி போக்க இதை நடத்துவர்.

ஆர்.மேனகா, துவாரகா, டில்லி.

*செடியிலிருந்து உதிர்ந்த மலர்களை பூஜைக்குப் பயன்படுத்தலாமா?

செடியில் இருந்து பறிப்பது நல்லது. பவளமல்லி மலர் மட்டும் விதிவிலக்கு.

கே.பாரதி கண்ணன், திங்கள்நகர், கன்னியாகுமரி.

*நலமுடன் வாழ தினமும் என்ன செய்யலாம்?

அவரவர் வழக்கப்படி நெற்றியில் திருநீறு, குங்குமம், திருமண் இட்டு கோயிலுக்குச் செல்லுங்கள். மனநலம், உடல்நலம், நீண்ட ஆயுளை பெறுவீர்கள்.

எம்.இந்துமதி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.

*படுக்கையறையில் சுவாமி படங்கள் இருக்கலாமா?

சுவாமி படங்கள் இருக்கக் கூடாது.

எம்.சந்தோஷ், நத்தம், திண்டுக்கல்.

*அர்ச்சகரிடம் விபூதி வாங்கலாமா அல்லது பூசச் சொல்லலாமா?

அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது நல்லது.

கே.வத்சலா, பெண்ணாடம், கடலுார்.

*சமையல் தொடங்கும் முன் நீராடுவது அவசியமா...

அன்னபூரணியின் இருப்பிடம் சமையலறை. நீராடிய பின் அன்னபூரணியை வணங்கிய பின் சமையுங்கள்.

எஸ்.கவிதா, ஆலந்துார், செங்கல்பட்டு.

*மோட்சதீப வழிபாடு நடத்துவது ஏன்?

இறந்தவரின் ஆன்மா கடவுளின் பாதத்தைச் சேர முப்பதாவது நாளில் மோட்ச தீபம் ஏற்றுகிறோம்.






      Dinamalar
      Follow us