
* பஞ்சபூத தலங்கள் என கோயிலை அமைத்தது ஏன்? சி.ஜோய்ஸ், சிவகங்கைநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள். இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். உயிர்கள் அனைத்தும் பஞ்சபூதத்தின் உருவாக்கமே. இந்த இயற்கை சக்திகளின் வடிவாக இருந்து நம்மைக் காப்பவர் இறைவன். இதை உணர்த்தும் விதத்தில் பஞ்சபூத தலங்களில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். திருவாரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் மண் லிங்கமாகவும், திருவானைக்காவலில் நீர் வடிவாகவும், திருவண்ணாமலையில் நெருப்பாகவும், காளஹஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில் ஆகாயமாகவும் உள்ளார்.
* உற்சவரை வணங்கினால் மூலவரை தரிசித்த புண்ணியபலன் கிடைக்குமா?வெ.பரமசிவன், கிண்டி'உற்சவர்' என்றால் 'திருவிழா நாயகர்' என்று பொருள். இவர் வலம் வரும் போது மூலவருக்குச் சமமான சக்தி உண்டு. சிதம்பரம் நடராஜர், திருச்செந்தூர் சண்முகர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி போன்ற தலங்களில் உற்சவரே கருவறையிலும் இருப்பது சிறப்பம்சம்.
** தாங்க முடியாத துன்பம் நேரும் போது கடவுளை நம்ப முடியாமல் போகிறதே! என்ன செய்யலாம்?எம்.ராமலிங்கம், விழுப்புரம்தாங்க முடியாத துன்பம் ஏற்படுவது முன்வினைப்பயனால் தான். கடவுள் வழிபாடு மட்டுமே துன்பத்தை தாங்கும் பக்குவம் ஏற்படும். 'வேயுறு தோளி பங்கன்' என்று தொடங்கும் ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை படியுங்கள். இறையருளால் நிம்மதி பெறுவீர்கள்.
* ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?ஜெ. தங்கமீனாள், தனக்கன்குளம்ஜோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை. நல்லது கெட்டது கலந்தே பலன்கள் இருக்கும். அதற்கேற்றாற் போல் நம் வாழ்க்கை நடைமுறையை வகுத்துக் கொள்ளலாம். அதற்காக, ஜோதிடமே சாஸ்வதம் என்று இருக்கத் தேவையில்லை. இறைவனை முழுமையாகச் சரணடைவதன் மூலம் விதியையே மாற்றலாம்.
* பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு என்ன?பா.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டைநம்மிடமுள்ள குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடும் நேரமே பிரதோஷ காலம். இக்காலத்தில் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சுவாமி நடனம் ஆடுவார். அப்போது சிவனை தரிசித்து செய்த தவறைப் பொறுத்தருள வேண்டினால் நிச்சயம் அருள்புரிவார். பாவ மன்னிப்பு வழங்குகின்ற அற்புத நேரமே பிரதோஷம்.
* பூஜையறையில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நைவேத்யம் வைக்க வேண்டுமா?எம்.காமாட்சி, காஞ்சிபுரம்ஒரே தட்டில் வைத்தால் போதும். கோயில் பூஜையில் நைவேத்யத்தை ஒரு தட்டில் வைத்தபடி அர்ச்சகர், விநாயகர் தொடங்கி எல்லா சந்நிதிக்கும் நிவேதனம் செய்வார். நிறைய படம் இருப்பதால் தனித்தனி நைவேத்யம் தேவையில்லை.