sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூன் 09, 2015 09:58 AM

Google News

ADDED : ஜூன் 09, 2015 09:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் குறிப்பிடுகிறாரே. இதன் விளக்கம் என்ன?

ஏ.மாணிக்கம், உலகம்பட்டி

திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள மந்திரவரி இது. கடவுள் ஒருவரே. நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார் திருமூலர். உலகத்தை ஒரே குடும்பம் ஆக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே இருக்கிறது.



** பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா?

எஸ்.ஜெயஸ்ரீ, சென்னை

ஒருவனுக்கு மூல வியாதி... கழிவறையில் இருந்து கொண்டு 'கடவுளே! வலி தாங்க முடியவில்லையே! எனக்கு இந்த நோயை குணமாக்குவாயா?' என்று வேண்டுகிறான். எங்கிருந்து கடவுளை நினைக்கிறோம்...எப்படி நினைக்கிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல! அவரை மனதார நினைத்தாலே போதும். பலன் கிடைக்கும்.

* காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு?

ஆர்.மீனாட்சி, போத்தனூர்

ஞாயிறு, வெள்ளி, அஷ்டமி திதி, பவுர்ணமி, பரணி நட்சத்திர நாட்கள் உகந்தவை. ராகு காலத்தில் வழிபடுவது இன்னும் சிறப்பு.



* சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன?

எஸ்.சொர்ணவள்ளி, சிந்தாமணி

சந்தனு மகாராஜாவிடம், கங்காதேவி எட்டு பிள்ளைகளைப் பெற்றாள். ஏழு பிள்ளைகளை நதியில் வீசி விட்டாள். காரணம், அந்தக் குழந்தைகள் முற்பிறப்பில், தங்கள் பிறவி சீக்கிரம் கழிய வேண்டுமென வரம் பெற்றிருந்தன. அதுபோல் தான் இதுவும்...இறந்து பிறக்கும்

குழந்தைக்கு கருவிலேயே ஒரு பிறவி கழிந்து விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?

எஸ்.எல்.பிச்சை முத்து, சிங்கப்பெருமாள் கோவில்

தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மிகவும் உகந்தவை. காசி, ராமேஸ்வரம் போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களுக்கு எந்த நாளில் சென்றாலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.



* துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம் உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?

ஜெயலட்சுமி, பெங்களூரு

பழம் காய்ந்திருந்தால் இவ்வாறு ஆகும். எலுமிச்சம் பழத்தை தவிர்க்கவும். மண் அகலில் தீபம் ஏற்றுவதே நல்லது.

* நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள்.

கே. கே. வெங்கடேசன், செங்கல்பட்டு

உங்கள் ஊர்க் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை நடத்த ஏற்பாடு செய்யுங்கள். அதற்கு சக்தி அதிகம். வீட்டு வழிபாட்டிலும், இயற்கை சீற்றம் நேராமல் உலகைக் காக்கும்படி கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்.

* சுவாமி முன் திருமணத்திற்காக பூக்கட்டி பார்ப்பது சரியா?

கே.ஆர்.சுந்தரம், மதுரை

ஜாதகம் இருந்தால் மணப்பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் பூக்கட்டி பார்த்து திருமணம் நடத்தலாம்.

* கோயிலுக்குச் செல்லும் போது நடை சாத்தியிருந்தால் முன்னால் நின்று வணங்கலாமா

எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்

கூடாது.. நடை திறக்கும் வரை காத்திருந்து வழிபாடு செய்யுங்கள்.






      Dinamalar
      Follow us