
* மனம் துாய்மையாக இருந்தால் நிம்மதியாக வாழலாம்.
* தாயின் அன்புக்கு இணையில்லை. கடவுளின் அன்பும் அது போலவே.
* கடவுளை நம்பிக்கையுடன் வணங்கு. துன்பத்தில் இருந்து
விடுதலை கிடைக்கும்.
* நீ எங்கிருந்தாலும் எதைச் செய்தாலும் கடவுளிடம் இருந்து தப்ப முடியாது.
* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவு நிறைந்த
மனம் போதும்.
* நம்பிக்கையும் பொறுமையும் உள்ளவர்களின் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.
* பொறுமையையும் பக்தியையும் கைவிட வேண்டாம். கால தாமதமும் ஒருவித நன்மைக்கே.
* நல்ல மனம் கொண்டவர்களின் வீட்டில் பற்றாக்குறை இருக்காது.
* மனிதபிறவி மகத்தானது என்று உணர்ந்து பயனுள்ள பணிகளைச் செய்.
* யாரிடமும் சண்டையிடாமல் விமர்சிக்கும் இடத்தைவிட்டு நகர்ந்துவிடு.
* சம்பாதிக்கும் பணத்தில் இரண்டு சதவீதமாவது தர்மம் செய்.
* நீ செய்த வினைகளின் பயனை தடுக்கவே முடியாது.
* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வார்கள்.
* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே.
வழிசொல்கிறார் ஷீரடி சாய்பாபா

