ADDED : பிப் 28, 2020 01:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி சில தலங்களில் உள்ளன.
* புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில். இங்கு சிவபெருமானே குருநாதராக தோன்றி மாணிக்கவாசகருக்கு உபதேசித்தார்.
* மதுரை மாவட்டம் திருவாதவூர் மறைநாதசுவாமி கோயில். மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது.
* தேனி மாவட்டம் சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயில். இங்கு சிவன், அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
* ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில். இங்கு சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்தார்.
* கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில். மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமான் திருவாசகத்தை எழுதிய தலம் இது.