
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்கசெவி மகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால்-சூழ்ந்த
துழாய்மன்னும் நீண்முடி என்தொல்லைமால் தன்னை
வழா வண்கை கூப்பி மதித்து
பொருள்: திருமாலை வணங்கும் போது 'குளிர்ச்சி பொருந்திய துளசிமாலை அணிந்தவனே! ஒளி வீசும் திருமுடி கொண்டவனே! காலம் காலமாக என்னிடம் அன்பு காட்டுபவனே! என்று உங்கள் வாய் வாழ்த்தட்டும்.கண்கள் அவரை காணட்டும்.செவிகள் அவர் புகழை மட்டுமே கேட்கட்டும்.