ADDED : ஜன 15, 2011 12:40 AM
அ நிறம் | அளவு
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.
பொருள்: ஒழுக்கத்துடன் வாழ அருள்புரியும் சூரியதேவா! எல்லா உலகங்களிலும் புகழோடு விளங்கும் ஞாயிறே! அழகில் சிறந்தவனே! பலம் மிக்கவனே! உன்னைப் போற்றுகின்றேன். அடியேனுடைய தீவினைகளைப் போக்கி அருள்புரிவாயாக.
