ADDED : செப் 23, 2016 10:29 AM

அ நிறம் | அளவு
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
பொருள்: பூம்பாவையே! மணம் மிக்க புன்னை மரங்கள் நிறைந்த அழகிய கடற்கரை தலம் மயிலாப்பூர். இங்கு கட்டப்பட்டுள்ள கபாலீச்சரம் என்னும் கோவிலில் சிவபெருமான் மூலவராக வீற்றிருக்கிறார். இவர் மீது பக்தி கொண்ட அடியவர்களுக்கு விருந்து படைக்கும் நிகழ்ச்சியைக் காணாமல் போவாயோ?
குறிப்பு: சம்பந்தர் தேவாரம்
