தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 10, 2017 11:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2017 11:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணாய் ஏழு உலகும் கருத்தாய அருத்தமுமாய்

பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே

மண்ணார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே.

பொருள்: ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களுக்கெல்லாம் கண்ணாக இருப்பவனே! மெய்ப்பொருளானவனே! இனிய இசைநயம் மிக்க தமிழ்மொழியாக விளங்குபவனே! ஒளிச்சுடராகத் திகழ்பவனே! பூஞ்சோலைகள் நிறைந்த திருமழபாடியில் அருள்புரியும் மாணிக்கம் போன்றவனே! மேலான சிவனே! உன்னையன்றி வேறொருவரை நான் நினைக்க மாட்டேன்.

குறிப்பு: சுந்தரரின் தேவாரப்பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us