ADDED : மார் 10, 2017 12:30 PM

அ நிறம் | அளவு
வடிவுடை வாள் தடங்கண் உமை அஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனி மூடவுரி கொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கிடமா
இடிபடு வானம் ஏத்த இருந்தானவன் எம்மிறையே.
(ஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)
பொருள்: வாள் போல கூர்மையான கண்கள் கொண்ட அம்பிகையே பயப்படும் விதத்தில், யானை வடிவ அசுரனைக் கொன்று, தன் உடம்பில் போர்த்திக் கொண்டவர் சிவன். உடம்பெங்கும் திருநீறு அணிந்தும், ஜடாமுடி தரித்தும் இருக்கும் அவர், உயர்ந்த மாடங்கள் நிறைந்த கும்பகோணத்தில் கோவில் கொண்டிருக்கிறார். மழை வளம் மிக்க இத்தலத்தில் தேவர்களும் வழிபட்டு பலனடைகின்றனர்.
