ADDED : மே 25, 2017 11:15 AM

அ நிறம் | அளவு
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாள்ஒடும் பெருந்தகை இருந்ததே.
(திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)
பொருள்: சிறந்த பெண்மணியான பார்வதியுடன் சிவன் சீர்காழியில் கோவில் கொண்டிருக்கிறார். கண்ணிற்கு இனியதும், வளம் மிக்கதுமான இத்தலத்தில்
வழிபடுபவர்களுக்கு பூமியில் நலமுடன் வாழும் பேறு கிடைக்கும்.குறையேதும் உண்டாகாது. முக்தி இன்பம் கிடைக்கும்.
