ADDED : செப் 07, 2018 03:25 PM

அ நிறம் | அளவு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
(திருமூலரின் திருமந்திர பாடல்)
பொருள்: ஐந்து கரங்களைக் கொண்டவரே! ஆனை முகத்தவரே! நிலாவின் இளம்பிறை போன்ற வளைந்த தந்தம் பெற்றவரே! சிவபெருமானின் மூத்த பிள்ளையே! ஞானக் கொழுந்தாக விளங்குபவரே! உம்மை என் புத்தியில் வைத்து வணங்குகின்றேன்.
