
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்பொடி மேனியினான் கருநீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிரமன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
(சுந்தரர் பாடிய பாடல்)
பொருள்: வெண்மையான திருநீறு பூசிய மேனியனே! கருநீலமான கழுத்தை உடையவனே! சிவந்த ஜடாபாரம் கொண்டவனே! பிரம்மனின் தலையைக் கொய்தவனே! பண்பில் சிறந்த அந்தணர்கள் வேதம் ஓதி வணங்கும் நன்னிலம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! உன்னை வணங்குகிறேன்.

