நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த
வண்ணச் சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!
(பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல்)
பொருள்: கண்ணனே! உனக்கு பிரம்மா உயர்ந்த பொன்தொட்டில் அனுப்பி வைத்தான். அதில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. வாமன அவதாரம் செய்தவனே! தாலேலோ! உலகத்தை அளந்தவனே! உனக்கு தாலேலோ!

