
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பன்னிரு கரத்தாய் போற்றி! பசும்பொன் மாமயிலாய் போற்றி!
முன்னிய கருணை யாறுமுகப் பரம்பொருளே போற்றி!
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி!
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி!
பொருள்: பன்னிரு கண்களை உடைய முருகனே! உம்மைப் போற்றுகிறேன். மயிலை வாகனமாக உடையவரே! அடியவர்களுக்கு விருப்பமுடன் கருணையை ஆறாகப் பொழிபவரே! ஆறுமுகப்பெருமானே! வள்ளி, தெய்வானையுடன் அருளும் கருணைக்கடலே! கண்களைப் போன்றவரே! அக்கண்களின் இருக்கும் கருமணி போன்றவரே! உம்மைப் போற்றி வணங்குகிறேன்.