sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 01, 2020 07:12 PM

Google News

ADDED : மே 01, 2020 07:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும்

கங்குகரை காணாத கடலே எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்

தங்கநிழல் பரப்பிமயல் சோடை எல்லாம்

தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே எல்லாம்

செய்ய வல்ல கடவுளே தேவ தேவே.

பொருள்: மதங்கள் என்னும் ஆறுகள் கலப்பதால் கரையில்லாமல் பொங்கி நிற்கும் கடல் போன்றவனே! உலகிலுள்ள அனைத்தையும் பார்க்கும் சக்தியுள்ளவனே! குளிர்ந்த சோலைகளில் உள்ள மரங்கள் நிழல் தருவது போல பக்தர்களின் துன்பங்களைக் களைபவனே! பூக்கள் மலர்ந்திருக்கும் தடாகம் போன்றவனே! ஞானம் என்னும் குமுத மலரை மலரச் செய்யும் நிலவே! எதையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! உன்னை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us