தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/எண்ணிக்கைக்கு முக்கியத்துவமில்லை - மனம் ஒன்றிய பிரார்த்தனையே உயர்ந்தது

எண்ணிக்கைக்கு முக்கியத்துவமில்லை - மனம் ஒன்றிய பிரார்த்தனையே உயர்ந்தது

எண்ணிக்கைக்கு முக்கியத்துவமில்லை - மனம் ஒன்றிய பிரார்த்தனையே உயர்ந்தது


ADDED : ஜன 28, 2011 10:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2011 10:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இறைவன் தனக்கு சொந்தம் என்று கருதி, ஒருவன் இறைவனை அழைப்பானானால் அது இறைவனுடைய கருணையினால் விளைந்ததாகும்.

* இறைவன் நம்முடையவன். கடவுளுக்கும், நமக்கும் உள்ள இந்த உறவு காலங் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவன் அனைவருக்கும் சொந்தமானவன். இறைவனிடம் நாம் பூணும் அன்பின் ஆழத்தைப் பொறுத்தே நாம் அவனை அறிகிறோம்.

* இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் பொழுது அவற்றின் நிலையாமையை நினைவுகூர்ந்து, அவரது புனிதத் திருவடிகளில் சரண் அடைவாயாக.

* மந்திரம் உடலைத் தூய்மைப்படுத்துகிறது. இறைவனின் மந்திரத்தினை உச்சரிப்பதால் மனிதன் தூய்மை அடைகிறான். மனித குரு மந்திரத்தைச் சீடனின் செவியில் ஓதுகிறார். கடவுள் அந்த மந்திரத்தின் ஆற்றலை விழித்தெழச் செய்கிறார்.

* இறைவனை எப்போதும் நினைவில் இருத்தி உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை நல்கும்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

* பணியில் ஈடுபடும் போது மனம் திருப்தியுற்று இருக்கிறது. இருப்பினும் ஜபம், தியானம், பிரார்த்தனை முதலியவை மிகவும் அவசியமானவை.

* எண்ணிக்கையைக் கணக்கு வைத்துக் கொண்டு நாம் ஜெபம் செய்தால் உன் கவனம் எண்ணிக்கையில் மட்டும் தான் இருக்கும். அதனால் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் ஜபம் செய்வது நல்லது.

* காலப்போக்கில் மனமேகுருவாக மாறிவிடுகிறது. மன ஒருமைப்பாடின்றி பல மணிநேரம் பிரார்த்தனை, தியானம் செய்வதைவிட இரண்டு நிமிடங்கள் முழுமையான ஒருமைப்பட்ட மனத்துடன் பிரார்த்தனை தியானம் செய்வது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us