ADDED : பிப் 02, 2020 11:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு - 250 கி
பச்சை மிளகாய் - 4
உப்பு - ½ ஸ்பூன்
மிளகு-5
தேங்காய் - பல்லுப் பல்லாக கீறியது சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: உளுந்தம் பருப்பை களைந்து ஊற வைத்து உப்பு போட்டு அரைக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், பொடி செய்த மிளகு, தேங்காய்ப்பல்லை மாவுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி எரியும் அடுப்பில் காய வைக்கவும். சிறு எலுமிச்சையளவு மாவை கையில் எடுத்து உருட்டி எண்ணெய்யில் இட்டு சிவக்கும் விதத்தில் வேக வைக்க சூடான வடை ரெடி.