ADDED : ஜூலை 22, 2019 10:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - கால் கப்
அரிசி மாவு - அரை கப்
துருவிய வெல்லம் - 2 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தில் கால் கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். வெல்லக் கரைசலில் மைதா, கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். அடிபாகம் கனமான வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து, குழிக்கரண்டியால் ஒரு கரண்டி மாவினை எடுத்து ஊற்றி அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். ஒருபுறம் வெந்ததும், திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும். எண்ணெய் வடிய விடவும். ஸ்ரீரங்கப் பெருமாள், திருச்சி அருகிலுள்ள கோயிலடி பெருமாள் கோயில்களில் அப்பம் நைவேத்யம் செய்யப்படுகிறது.