
இளைஞர்கள் எளிதாக ஆன்மிகத் தகவல்களை தெரிந்துகொள்ளும் விதத்தில் இப்பகுதி வெளியாகிறது.
இந்த வார ஸ்லோகம்
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸம்ப்ரம்
குமாரம் தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம் யஹம்
பொருள்: பூமிதேவியின் தவப்புதல்வனே! மின்னலைப் போன்ற
பிரகாசம் கொண்டவனே! சக்தி ஆயுதம் தாங்கியவனே! குமர வடிவம் கொண்டவனே! மங்களன் என்ற திரு நாமத்துடன் திகழும் அங்கார கனே! செவ்வாயே! உன்னைப் போற்றி வணங்குகிறேன்.
மனப்பாடப்பகுதி
வந்தாய்! என் மனம் புகுந்தாய்!
மன்னி நின்றாய்!
நந்தாத கொழுஞ்சுடரே! எங்கள் நம்பீ!
சிந்தா மணியே! திருவேங்கடம் மேய
எந்தாய்! இனியான் உன்னை
என்றும் விடேனே!
பொருள்: அணையாத தீபச்சுடராகத் திகழ்பவனே! எங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்சிந்தாமணி போன்றவனே! எங்கள் தலைவனே! திருவேங்கட மலையில் குடிகொண்டிருக்கும் என் தாயே! என் மனதில் நீயாகவே குடி கொண்டாய். நிலைத்து நின்று விட்டாய். இனி நான் என்றும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்.