ADDED : மே 16, 2020 11:54 AM

* நெற்றியில் இடும் விபூதி, குங்குமம், சந்தனம் உடலிலுள்ள நாடிகளின் கெட்ட நீரை வற்றச் செய்யும். உடல்நலம், நீண்ட ஆயுள் பெருகும்.
* விரதம் இருக்கும் நாட்களில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
* சித்திரை, வைகாசியில் செண்பகப்பூவை முருகனுக்குச் சாற்றினால் உணவிற்கு குறைவு ஏற்படாது.
* செவ்வாய் தோறும் ராகு காலத்தில் (பகல் 3:00 - 4:30 மணி) துர்கையை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* அதிக இடைவெளி விட்டு தொடுத்த மலர்களைக் சூடுவது கூடாது. கணவன், மனைவி இடையே உள்ள நெருக்கத்தை குறைக்கும்.
* சுடுகாட்டுப்புகை ஆயுளைக் குறைக்கும். ஓமப் புகை ஆயுளைக் கூட்டும்.
* வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி, சுபவிஷயத்தில் தடைகள் நீங்கும். செல்வம் பெருகும்.
* நீண்ட நாள் விவகாரத்தில் தீர்வு கிடைக்க ஞாயிறன்று சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது.
* சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் நலம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி அதிகரிக்கும்.
* காகம், நாய் தீண்டிய உணவு, துாசி விழுந்த சோற்றை உண்பது கூடாது.