sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 07, 2020 11:43 AM

Google News

ADDED : ஜூலை 07, 2020 11:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பூஜையறையில் இரண்டு முகமாகத் திரியிட்டு விளக்கு ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

* வில்வ மரம் இருக்கும் வீட்டில் குடியிருந்தால் காசி முதல் ராமேஸ்வரம் வரையான சிவத்தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.

* கோயிலின் மதில் சுவருக்கு உள்ளே எக்காரணம் கொண்டு செருப்பு அணிந்து செல்லக் கூடாது.

* கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது. இவருக்கு எள் சோறு படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.

* மந்திரங்கள் சொல்லி ஹோமம் நடத்தும் போது ஹோமம் முடியும் வரை யாரிடமும் பேசக் கூடாது.

* அதிகாலை 4:00 - 5:00 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் சர்வ மங்கள யோகம் உண்டாகும்.

* இறந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் செல்பவர்கள் ருத்ராட்சம், ஸ்படிகமாலைகளை அணியக் கூடாது.

* திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் முருகன் வில்லும், அம்பும் ஏந்திய கோலத்தில் இருக்கிறார்.

* ஆசிரியரின் மனைவி, அரசனின் மனைவி, அண்ணி, மாமியார் ஆகியோர் பெற்ற தாய்க்கு சமமானவர்கள்.

* உடல்நலம் இல்லாதவர்கள் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் நோய் குணமாகும்.

* இதயத்திலிருந்து 108 நாடிகள் பிரிகின்றன. இதனால் இதய பூர்வமாக நாம் சொல்லும் கடவுளின் திருநாமங்களை 108 என்ற எண்ணிக்கையில் ஜபிக்கிறோம்.

* எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வை துளியில் இருந்து உருவான புனிதமான தானியம்.

* சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பனும், ராமனுக்கு உணவு கொடுத்த குகனும் எளிய வேடுவ பக்தர்கள்.






      Dinamalar
      Follow us