ADDED : ஜூலை 11, 2020 04:17 PM

* இரவில் துணி துவைப்பது, குப்பையை வெளியில் கொட்டுவது, முடி, நகம் வெட்டுவது கூடாது.
* மகாவிஷ்ணுவுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்வதும், நெல்லிக்கனியை படைப்பதும் சிறப்பானது. நெல்லிமரம் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் தங்கியிருப்பார்.
* அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, பிறந்த நாள், திருமண நாள், விரத நாட்களில் எண்ணெய்க் குளியல் கூடாது.
* அபிராமி கோயில் கொண்டிருக்கும் திருக்கடையூர் எமபயம் போக்கும் தலமாகும். இங்கு காலசம்ஹார மூர்த்தியாக சிவன் அருள்புரிகிறார்.
* கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது கூடாது.
* சிவனின் நண்பர் என்பதால் சுந்தரருக்கு தம்பிரான் தோழர் என்றும் பெயருண்டு.
* திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோவிலில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
* சமைக்கும் முன் அரிசியை மூன்று முறை நீரால் கழுவாமல் சாதம் வடிக்கக் கூடாது.
* மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள், 2 தங்க விமானங்கள் உள்ளன.
* மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில்களில் அஷ்டாங்க விமானம் உள்ளது. இது ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் அம்சம் கொண்டது.
* பெண்கள் சூரிய உதயம், அஸ்தமன நேரத்தில் கண்ணீர் விட்டு அழக்கூடாது. அப்படி செய்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்.