தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 25, 2022 11:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2022 11:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வைணவர்களால் கோயில் என அழைக்கப்படும் தலம் ஸ்ரீரங்கம்.

* 108 திவ்யதேசங்களில் 88 கோயில்களை பாடியவர் திருமங்கையாழ்வார்.

* பூமியில் இல்லாத திவ்ய தேசங்கள் பாற்கடல், பரமபதம்.

* காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு இடையே உள்ள திவ்யதேசம் ஸ்ரீரங்கம்.

* விநாயகர் மீது பிள்ளைத்தமிழ் பாடியவர் சிவஞான முனிவர்.

* நன்னுாலுக்கு முதலில் உரை எழுதியவர் மயிலைநாதர்.

* பன்னிரு திருமுறை பாடல்களைப் பாடுவோருக்கு ஓதுவார் என்று பெயர்.

* பிள்ளை பாதி புராணம் பாதி எனப்படும் நுால் பெரிய புராணம்.

* திருப்பரங்குன்றம் தலபுராணத்தை பாடியவர் நிரம்பிய அழகிய தேசிகர்.

* சேய்தொண்டர் புராணத்தில் 41 முருகனடியார்கள் இடம் பெற்றுள்ளனர்.

* பரமபதத்தை அடைந்தோருக்கு நித்யசூரிகள் என்று பெயர்.

* திருமால் மீது பல்லாண்டு பாடப்பெற்ற திவ்யதேசம் மதுரை.

* முதன் முதலில் பாடப்பட்ட பதிகம் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகம்.

* தமிழகத்தில் சைவ ஆதின மடங்கள் 18 உள்ளன.

* எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் திருவாசகம், திருக்கோவையார்.

* சிற்றிலக்கிய களஞ்சியம் எனப்படுவது பதினோராம் திருமுறை.

* கந்தர்கலி வெண்பாவை பாடினால் பேச்சுத்திறன் உண்டாகும்.

* முதல் ஆழ்வார்கள் எனப்படுபவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

* ஆதிவேதங்கள் எனப்படுபவை ரிக், யஜூர், சாமம்.

* வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர்.

* தேவார முதலிகள் எனப்படுபவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.

* பட்டினத்தார் வியந்த நாயன்மார்கள் சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர்.

* சிவன் கோயில்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

* முருகப்பெருமானை திதி - சஷ்டி, கிழமை - வெள்ளி, நட்சத்திரம் - கார்த்திகையில் வழிபடுவது சிறப்பு.

* மனம், மொழி, மெய்களால் கடவுளை வழிபடுவதை திரிகரண சுத்தி என்பர்.

* திவ்ய தேசங்களில் திருமால் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் சேவை சாதிப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us