sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 22, 2023 10:18 AM

Google News

ADDED : செப் 22, 2023 10:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'ஸ்வாமி'. அதாவது இந்த உலகத்திற்கு அவர்தான் சொந்தக்காரர்.

* 'ஸ்வம்' என்பதற்கு தமிழில் உடைமை என்று பொருள். இதனால்தான் கோயில் கல்வெட்டுக்களில் திருச்சிற்றம்பலம் உடையார், திருவேங்கடம் உடையார், திருநாகேச்சுரம் உடையார், கபாலீசுவரம் உடையார் என்று தெய்வங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

* ஸ்வம் என்பதில் இருந்தே ஸ்வந்தம் (சொந்தம்) என்ற சொல் உருவானது. இதனால்தான் கேரளாவில் கோயிலைச் சேர்ந்த சொத்தை 'தேவஸ்வம்' என்கிறார்கள்.

* குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால் வைஷ்ணவர்கள் ஸ்ரீராமானுஜரை 'உடையவர்' என்கிறார்கள்.

* உலகில் உள்ளதனைத்தும் கடவுள் ஒருவருக்கே உடைமையாகும். இதற்காகவே, 'எல்லாம் என் உடைமையே' என்று தாயுமானவரும் பாடினார்.

* சிவபெருமானுக்கு 'பசுபதி' என்றும் பெயருண்டு. இங்கு பசு என்பது நம்மைக் குறிக்கும். பதி என்பது தலைவன்.

* சைவ சித்தாந்தத்தில் பதி - பசு - பாசம் என்று சொல்லப்படும். இதையே

ஆதிசங்கரர் தனது அத்வைத வேதாந்தத்தில் பிரம்மம் - ஜீவன் - மாயை என்று சொல்கிறார்.

* தெய்வம் என்றால் 'விதி'. ஸ்வாமி நமக்குத் தருகிற கர்ம பலனே விதி.

* சிவன்கோயிலில் கர்ப்ப கிரஹத்தின் சுவரில் மேற்கு பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். சிவபெருமானுடைய அறுபத்தி நான்கு வடிவங்களில் ஒருவர் லிங்கோத்பவர்.

* விநாயகர் வழிபாட்டில் விசேஷமானது அவரை வலம் வருவதுதான். காரணம் இவர் தனது பெற்றோரான சிவன், பார்வதியை உலகம் என போற்றி வலம் வந்து பழமும், பலனையும் பெற்றார்.






      Dinamalar
      Follow us