ADDED : அக் 27, 2023 11:15 AM

* திவ்யதேசங்களில் ஒன்றான கூடலழகர் கோயில் மதுரையில் உள்ளது. இங்கு பெருமாள் எட்டெழுத்து மந்திர வடிவமான அஷ்டாங்க விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
* பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர், பெருமாளை தரிசிக்க வேண்டி பூலோகத்தில் தவமிருந்தார். அவருக்கு அருள்புரிய பெருமாளும் தேவியருடன் இங்கு காட்சியளித்தார்.
* இங்கு எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய' வடிவத்தில் அஷ்டாங்க விமானம் உள்ளது. இந்த விமானத்தை புரட்டாசி சனிக்கிழமையில் 12 முறை சுற்றி வந்தால் நினைத்தது நிறைவேறும்.
* தேவசிற்பியான விஸ்வகர்மா மூலம் அஷ்டாங்க விமானம் அமைத்து கோயில் கட்டினார் சனத்குமாரர்.
* இங்கு கூடலழகர் அமர்ந்தகோலத்தில் தேவியருடன் காட்சியளிக்கிறார். இரண்டாவது நிலையில் சூரியநாராயணர் நின்ற நிலையிலும், மூன்றாவது நிலையில் பாற்கடல்நாதர் பள்ளி கொண்ட நிலையிலும் உள்ளனர்.
* பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களை விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
* பெருமாளே பரம்பொருள் என்பதை இங்கு வந்து நிரூபித்தவர் பெரியாழ்வார். இவர் இத்தலத்தில் பாடிய 'திருப்பல்லாண்டு' பாடலே அனைத்து பெருமாள் கோயில்களிலும் தினமும் நடை திறக்கும் போது பாடப்படுகிறது.
* இத்தலத்தை தரிசித்தாலும் மனதால் நினைத்தாலும், 'வாழ்க பல்லாண்டு' என்று கூடலழகர் வரம் கொடுப்பார்.
* சத்திய விரதன் என்னும் மன்னன் கூடலழகர் மீது பக்தி கொண்டிருந்தார். வைகையின் துணை நதியான கிருதுமால் நதியில் இவர் நீராடிய போது பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் அளித்தார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மீன் சின்னத்தை ஏற்றார். இதன் அடிப்படையில் பாண்டியரின் அரசு சின்னமாக மீன் இருந்துள்ளது.