ADDED : ஜூலை 27, 2014 03:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.....
சேந்தனார்
2. அசுரகுருவான சுக்ரனின் மனைவி......
சுகீர்த்தி
3. நாயன்மாராகத் திகழும் சுந்தரரின் பெற்றோர்.....
சடையனார், இசைஞானியார்
4. சிவபெருமானை மயில் வழிபட்ட இரு தலங்கள்...
மயிலாடுதுறை, மயிலாப்பூர்
5. தனித்தனியாக மூன்று மூலவர்கள் உள்ள சிவத்தலம்.....
காளையார் கோவில்
6. எந்த இலையின் பின்புறம் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்?
வில்வம்
7. பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரம்.....
விஷ்ணு சகஸ்ரநாமம்
8. அனுஷ நட்சத்திரத்தை வடமொழியில் .....என்பர்
அனுராதா
9. சூரியனின் இயக்க அடிப்படையில் கணிக்கும் காலமுறை......
சவுரமானம்
10. உபநிஷதங்களில் மிகவும் சிறியது.....
மாண்டூக்ய உபநிஷதம்(12மந்திரங்கள் மட்டும் கொண்டது)