ADDED : ஜூன் 20, 2010 04:51 PM

"" வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி. வைகுண்டமே ஸ்ரீரங்கம். வாசுதேவனே அரங்கன்.
பிரணவமே விமானம். விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள். உள்ளே பள்ளி கொண்டிருக்கும் அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள்'' என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஆலயங்களைத் திவ்யதேசங்கள் என்று புகழ்வர். திவ்யதேசங்கள் 108 என்கிறோம்.
ஒருமுறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
டி.கே. ராமமூர்த்தி